வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 14-ஆவது தேசிய மாநாடு சோசலிசப் பாதையில் புதிய சகாப்தத்தை நோக்கிய வரலாற்றுப் பயணம்
21 Jan 2026, 2:28 pm
<p><strong>வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 14-ஆவது தேசிய மாநாடு சோசலிசப் பாதையில் புதிய சகாப்தத்தை நோக்கிய வரலாற்றுப் பயணம்</strong></p>
<p>வியட்நாம் நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைப் பறைசாற்றும் விதமாக, தலைநகர் ஹனோயில் உள்ள தேசிய மாநாட்டு மையத்தில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPV) 14-ஆவது தேசிய மாநாடு ஜனவரி 20 செவ்வாயன்று எழுச்சியுடன் தொடங்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாடு, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப் பட்டதன் நூற்றாண்டு விழாவான 2030 மற்றும் வியட்நாம் சமூகக் குடியரசு உருவானதன் நூற்றாண்டு விழாவான 2045 ஆகிய இரண்டு முக்கிய இலக்கு களை நோக்கிய வளர்ச்சிக்கான வரைபடத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. மாநாட்டின் பிரதிநிதித்துவமும் தலைமைத்துவமும் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 56 லட்சத்திற்கும் அதிகமான கட்சி உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் 1,586 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பொதுச் செயலாளர் டோ லாம் தலைமை யிலான 16 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் தலைமைக்குழு மாநாட்டை வழிநடத்துகிறது. மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய குடியரசுத் தலைவர் லுவாங் குவோங், இந்த 14ஆவது மாநாடு என்பது வியட்நாமிய மக்களின் ஒட்டுமொத்த விருப்பத்தை யும், இறையாண்மையையும், சோச லிச கட்டுமானத்தின் உறுதியையும் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்றுத் திருப்பம் என்று பிரகடனம் செய்தார். சர்வதேசச் சூழலில் நிலவும் கடும் போட்டிகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில், வியட்நாம் தனது தேசியப் பெருமிதத்தையும், சுயசார்பையும் நிலைநாட்டும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்றார். நிர்வாகச் சீர்திருத்தம்: ‘இரண்டு அடுக்கு’ மாடலின் புரட்சி மாநாட்டிற்கு முன்னதாக, வியட் நாம் தனது நிர்வாகக் கட்டமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை முன்னெடுத் துள்ளது. மாநாட்டிற்கு முதல் நாள், இதுகுறித்து வெளியுறவுத் துறை துணை அமைச்சர் லே தி து ஹாங் விளக்குகையில், வியட்நாம் தனது பாரம்பரியமான மூன்று அடுக்கு உள்ளூர் நிர்வாக முறையை (மாகா ணம், மாவட்டம், கம்யூன்) மாற்றி, ஒரு புதிய ‘இரண்டு அடுக்கு’ நிர்வாக முறையைச் சோதனை அடிப்படையில் அமல்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட் டார். இதன்படி, மாவட்ட அளவிலான நிர்வாகம் என்பது இனி ஒரு முழுமை யான அரசாங்க அடுக்காக இல்லாமல், மாகாண அதிகாரத்திற்கு உட்பட்ட நிர்வாக அலகாகச் செயல்படும். மாறாக, அடி மட்ட அளவிலான ‘கம்யூன்’ (Commune) அமைப்புகளுக்கு அதிகப்படியான நிதி அதிகாரம், திட்டமிடும் உரிமை மற்றும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரப் பரவலாக்கல் முறை அதிகாரத்துவத் தடைகளை நீக்கி, மக்களுக்கான சேவையை விரைவு படுத்தவும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும் உத வும் என்று கட்சி உறுதியாக நம்புகிறது. 40 ஆண்டுகால ‘டோய் மோய்’ மற்றும் சித்தாந்த ஆய்வு இந்த மாநாட்டின் ஒரு முக்கிய பகுதியாக, 1986-இல் தொடங்கப்பட்ட ‘டோய் மோய்’ (Doi Moi - புதுப் பித்தல்) கொள்கையின் 40 ஆண்டு காலச் செயல்பாடுகள் குறித்த ஆழ மான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது. மார்க்சிய-லெனினியக் கொள்கைகளை வியட்நாமின் மண்ணுக்கேற்றவாறு தகவமைத்து, ‘சோசலிசத்தை நோக்கிய சந்தைப் பொருளாதாரம்’ எனும் பாதையில் வியட்நாம் அடைந்துள்ள வெற்றிகள் விரிவாக விவாதிக்கப்படுகின்றன. கடந்த 40 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதுடன், சர்வதேச அளவில் வியட்நாமின் மதிப்பும் உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த வளர்ச்சியில் உள்ள போதாமை கள், குறைவான உழைப்புத் திறன் மற்றும் பொருளாதாரப் போட்டித் திறன் போன்ற சவால்களையும் அந்த அறிக்கை நேர்மையுடன் ஒப்புக்கொண்டுள்ளது. வரும் 2026-2030 காலப்பகுதிக்கான புதிய வளர்ச்சி உத்திகள், இந்த 40 ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையிலேயே வகுக்கப்பட்டுள்ளன. காலநிலை சவால்களும் பொருளாதார வளர்ச்சியும் 2025-ஆம் ஆண்டு வியட்நாம் சந்தித்த கடும் இயற்கைப் பேரிடர் களுக்கு மத்தியிலும் எட்டப்பட்ட பொரு ளாதார வளர்ச்சி மாநாட்டில் பெரும் பேசுபொருளாக அமைந்துள்ளது. அந்த ஆண்டில் மட்டும் 15 சூறா வளிகள் உட்பட 21 வெப்பமண்டல அமைப்புகளால் வியட்நாம் கடுமை யாகப் பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத மழையும் வெள்ளமும் நாட்டைச் சோதித்தபோதும், வியட்நாம் தனது பொருளாதார உறுதிப்பாட்டை நிலைநாட்டியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 2025ஆம் ஆண்டில் 8.2% ஜிடிபி (GDP) வளர்ச்சியை வியட்நாம் எட்டியுள்ளது. இது சோச லிசத் திட்டமிடலுக்கும், பேரிடர் மேலாண்மைக்கும் கிடைத்த வெற்றியாக முன்வைக்கப்படுகிறது. நான்காவது தொழில்புரட்சியின் விளை வுகளான செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை ஆற்றல் போன்றவற்றை நாட்டின் உற்பத்தித் திறனை அதி கரிக்கப் பயன்படுத்துவது குறித்தும் மாநாட்டில் விரிவான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச உறவும் ‘மூங்கில் ராஜதந்திரமும்’ வெளியுறவுத் துறையைப் பொறுத் தவரை, வியட்நாம் தனது புகழ்பெற்ற ‘மூங்கில் ராஜதந்திர’க் கொள்கையை (Bamboo Diplomacy) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மூங்கில் மரம் எவ்வளவு பலமான காற்றடித்தாலும் வளைந்து கொடுத்து, ஆனால் தனது வேர்களை மண்ணில் உறுதியாகப் பதித்திருப்பதைப் போல, வியட்நாம் தனது இறையாண்மையில் சமரசம் செய்யாமல் அனைத்து நாடுகளு டனும் சமமான நட்புறவைப் பேணு கிறது. கட்சிக்கு கட்சி (Party diplomacy), அரசுக்கு அரசு மற்றும் மக்களுக்கு மக்கள் என மூன்று நிலைகளில் சர்வ தேச உறவுகளை ஒருங்கிணைந்த முறை யில் கையாள கட்சி முடிவு செய்துள்ளது. ரஷ்யா, லாவோஸ், கம்போடியா, இந்தியா, இலங்கை, கியூபா மற்றும் மொசாம்பிக் போன்ற நாடுகளின் ஊடகப் பிரதிநிதிகள் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டது, வியட்நாமின் விரிவான சர்வதேச உறவுகளைப் பறைசாற்றுகிறது. ஊழலுக்கு எதிரான ‘எரியும் உலை’ வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி யின் நற்பெயரையும், மக்களின் நம்பிக் கையையும் காக்க ஊழலுக்கு எதி ரான போராட்டத்தை (Blazing Furnace) மேலும் தீவிரப்படுத்த இம்மாநாடு தீர்மானித்துள்ளது. கட்சியின் 13ஆவது மத்தியக் குழுவின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் போது, ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என்பது வலியுறுத்தப் ப்பட்டது. “மக்களே வேர்” (People are the roots) என்ற தத்துவத்தின் அடிப்படையில், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதி ராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தலைமை உரை கள் சுட்டிக்காட்டின. 2045-ஐ நோக்கிய நூற்றாண்டு இலக்குகள் மாநாட்டின் இறுதி நோக்கம் என்பது வியட்நாமை ஒரு நவீன சோசலிச நாடாக மாற்றுவதாகும். இதற்காக இரண்டு முக்கிய காலக் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: 2030 இலக்கு: கட்சி நிறுவப்பட்ட 100-ஆவது ஆண்டில், நவீனத் தொழில் துறையைக் கொண்ட, நடுத்தர உயர் வருமானம் ஈட்டும் நாடாக வியட்நாமை உயர்த்துவது. 2045 இலக்கு: வியட்நாம் குடியரசு உருவானதன் 100-ஆவது ஆண்டில், உயர் வருமானம் கொண்ட, முழுமை யான தகுதியுடைய வளர்ந்த நவீன சோசலிச நாடாக வியட்நாமை மாற்றுவது. இந்த இலக்குகளை எட்ட கட்சியின் சாசனத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள், புதிய மத்தியக் குழு வின் தேர்வு மற்றும் 15 ஆண்டுகால கட்சியின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் இந்த மாநாட்டின் அமர்வு களில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளன.</p>
