முந்தய பக்கம்

பெரம்பலூரில் 10 ஆவது புத்தகத் திருவிழா தொடங்கியது

28 Feb 2026, 2:29 pm
பெரம்பலூரில் 10 ஆவது புத்தகத் திருவிழா தொடங்கியது
<p><strong>பெரம்பலூரில் 10 ஆவது புத்தகத் திருவிழா தொடங்கியது</strong></p> <p>பெரம்பலூர், பிப்.28- &nbsp;பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் 10 ஆவது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவை, மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். &nbsp;இந்த புத்தக திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் அரங்குகளையும், பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மை துறை, அரசு பாடநூல் கழகம், ஊரக வளர்ச்சி முகமை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட 100 அரங்குகளை அனைவரும் பார்வையிட்டனர். &nbsp;சிறைகளில் தண்டனை கைதிகளாக உள்ளவர்க ளுக்கு, புத்தகம் வாசிக்க வழங்கிடும் வகையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் புத்தகங்களை வழங்கினர். புத்தகத் திருவிழாவின் தொடக்க விழாவில், ஆவணப்பட இயக்குநர், எழுத்தாளர் பாரதி கிருஷ்ண குமார் &ldquo;எல்லோரும் கொண்டா டுவோம்&rsquo;&rsquo; என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில், &nbsp;கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த புத்தகத் திருவிழா பிப்.27 அன்று தொடங்கி மார்ச் 8 வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சி. அனிதா, மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், வருவாய் கோட்டாட்சியர் மு.அனிதா, BAPASI இணை செயலாளர் சாக்ரடீஸ் &nbsp;உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram