தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெறுப்பு அரசியலின் ‘இரண்டாம் பாகம்’

19 Feb 2026, 3:09 pm
வெறுப்பு அரசியலின் ‘இரண்டாம் பாகம்’

வெறுப்பு அரசியலின் ‘இரண்டாம் பாகம்’

கேரளத்தின் மதச்சார்பற்ற மாண்பையும், சமூக நல்லிணக்கத்தையும் சிதைக்கும் நோக்கில் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற் கான அறிவிப்பு, அம்மாநிலத்தின் மீது தொடுக் கப்படும் மற்றொரு பண்பாட்டுப் போர் ஆகும். முதல் பாகமே அப்பட்டமான பொய்களாலும், வகுப்புவாத உள்நோக்கத்தோடும் உருவாக்கப் பட்ட ஒரு புனைவு என்பதை கேரள மக்கள் ஏற்கெனவே நிரூபித்துவிட்டனர். தற்போது அதன் தொடர்ச்சியாக டீசர் வெளியிடப்பட்டி ருப்பது, மாநிலத்தின் மீது திட்டமிட்டு நடத்தப் படும் அவதூறுப் பிரச்சாரத்தின் நீட்சியாகும்.

இந்தத் திரைப்படம் கலைப்படைப்பு என்ற பெயரில் - கேரளத்தின் ‘மதச்சார்பற்ற ஒற்றுமை’ மற்றும் ‘கேரளா மாடல்’ வளர்ச்சியை கண்டு அச்சப்படும் - சங் பரிவார சக்திகளின் சூழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே வெளியாகிறது.

பரஸ்பர மரியாதையுடனும், சகோதரத்து வத்துடனும் மக்கள் வாழும் ஒரு நிலப்பரப்பை, பயங்கரவாதத்தின் விளைநிலமாக சித்தரிக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. கேரளா வின் சமூகக் கட்டமைப்பைப் பிளவுபடுத்தத் துடிக்கும் இத்தகைய சக்திகள், மாநிலத்தின் மீது வெறுப்பைக் கக்குவதையே தங்கள் நோக்க மாகக் கொண்டுள்ளன.

கேரளாவின் உண்மையான வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களாலும், தியாகங்களா லும், சமூகச் சீர்திருத்தங்களாலும் கட்டமைக்கப் பட்டது. ஆனால், இத்தகைய போலிப் படைப்பு கள் அந்த உன்னத வரலாற்றை இருட்டடிப்பு செய்து, மதங்களுக்கு இடையே நச்சுச் சுவர்க ளை எழுப்ப முயல்கின்றன. சம்மதத்துடன் நடை பெறும் திருமணங்களைக் கூட ‘கட்டாய மத மாற்றம்’ என்று சித்தரிப்பதன் மூலம், தனிமனித சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் இந்தச் சக்திகள் கேலிக்குள்ளாக்குகின்றன. இத்தகைய நச்சுப் பிரச்சாரங்கள் வளர்ச்சியை முடக்கி, மக்களைத் துண்டாடவே பயன்படும்.

திரைக்கலை என்பது மக்களை இணைப்ப தற்கான ஒரு பாலமாக இருக்க வேண்டும். ஆனால், கெடுவாய்ப்பாக அது இங்கே பிளவுக ளை உண்டாக்கும் கருவியாக மாற்றப்பட்டுள் ளது. ஐ.எஃப்.எஃப்.கே (IFFK) போன்ற சர்வதே சத் திரைப்பட விழாக்களில் ‘பீஃப்’ போன்ற தலைப்பிலான படங்களுக்கு அனுமதி மறுக்கப் படும் சூழலில், பிரிவினைவாதத்தைத் தூண்டும் இத்தகைய ‘நச்சுப் படைப்புகளுக்கு’ தாராள மாக அனுமதி வழங்கப்படுவது வியப்பிற்குரி யது. இது அதிகார வர்க்கத்தின் ஒருதலைப்பட்ச மான போக்கையே காட்டுகிறது.

முதலமைச்சர் பினராயி விஜயன் தொடர்ந்து சுட்டிக்காட்டுவது போல, கேரளா தனது நிலை யான வளர்ச்சி, சிறந்த சட்ட அமலாக்கம் மற்றும் உயரிய கல்வித் தரத்தின் மூலம் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. இந்த சாத னைகளை மழுங்கடிக்கச் செய்யவே இத்தகைய போலிப் பிம்பங்கள் உருவாக்கப்படுகின்றன. பொய்ப் பிரச்சாரங்களால் கேரளத்தின் மதச்சார் பற்ற அடித்தளத்தை அசைக்க முடியாது என்பதை மக்கள் மீண்டும் நிரூபிப்பார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.