தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேன் இந்தியா

17 Jan 2026, 2:42 pm
ஸ்கேன் இந்தியா

படம் சொல்லும் (அவலக்) கதை..!!

மருத்துவத்துறையில் புகழ்பெற்ற தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வாயிலுக்கு சற்று வெளி யில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உறவினர்கள் இப்படித்தான் தங்கள் பொழுதைக் கழிக்கிறார்கள். அது வும் கடந்த ஒரு மாதகாலம் தில்லியில் கடும் குளிர் அடிக்கி றது. அதோடு, காற்று மாசு வேறு. நாமும் நோயாளியாக மாறி உள்ளே போய்விடுவோம் போலிருக்கிறது என்று அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். தில்லி உயர்நீதி மன்றம் எய்ம்ஸ் நிர்வாகத்தைக் கிழித்துத் தொங்கவிட்டுள் ளது. ஓய்வறை கட்டி விடுகிறோம் என்று எய்ம்ஸ் சொல்லி யிருக்கிறது. வழக்கம்போல, ஆளும் பாஜக வேடிக்கை பார்க்கிறது.

ஓடுகிற தண்ணியில..

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு கங்கைக் கரைப் படித்துறைகளில் இந்துக்க ளைக் தவிர பிற மதத்தினருக்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். ஆங்காங்கே  தட்டிகளில் எழுதி வைத்துள்ளனர். இதற்கு இயற்கை  ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். ஆறுகள் இயற்கையின் கொடை. அவை அனைவ ருக்கும் சொந்தமானவை. இப்படி ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமானதாக அறிவிப்பது சட்டவிரோதம் என்கிறார்கள். ஏற்கனவே, அசுத்தமாகியுள்ள ஆறு களை ஆய்வு செய்யவும் அனுமதி இருக்காது என்ற அச்சம் அவர்களிடம் எழுந்திருக்கிறது. இனிமேல், ஓடுகிற தண்ணீரை மத ரீதியாக பிரிப்பார்கள் என்றும், அனுமதி மறுக்கும் வேலையை மத வெறியர்கள் செய்யத் தொடங்கி விடுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் கண்டித்துள்ளனர்.

தீயாகத் தொடர்கிறது..

உத்தரப்பிரதேசத்தில் மகா மேளா நடைபெற்று வருகிறது. கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி சங்கமிக்கும் இடத்தில் இந்தத் திருவிழா நடக்கிறது. கடந்த ஆண்டில் மகா கும்ப மேளா நடைபெற்று அதில் நிறைய உயிரிழப்பு கள் ஏற்பட்டன. உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மாநில அரசு மறைத்து விட்டது. தற்போதும் கூடாரங் கள் தீப்பிடித்து எரிகின்றன. மூன்று நாட்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை அன்று இரவில் ஏற்பட்ட விபத்தில் மனாஸ் மிஸ்ரா என்ற 26 வயது இளைஞர் உயிரிழந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பெரு மளவில் செய்யப்படுவதாக மாநில அரசு விளம்பரம் செய்கிறது. இப்படித்தான் கும்பமேளாவின் போதும் நடந்தது. தற்போது இந்த உயிரிழப்புகள் தொடர்கிறது

இடியாப்பச் சிக்கல்

பாஜகவின் 12ஆவது தேசியத் தலைவர் ஜனவரி 20 ஆம் தேதியன்று  தேர்வு செய்யப்படுகிறார். தற்போது செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நிதின் நபின், தலைவர் பொறுப்பை ஏற்கிறார். ஆர்.எஸ்.எஸ். அனுமதி முத்திரை அவருக்குக் கிடைத்து விட்டது என்று கட்சியினர் சொன்னாலும், இவர் மோடியின் ஆதர வாளராகவே அடையாளம் காணப்படுகிறார். இதுவரையில் இல்லாத அளவுக்கு, பெரும் எதிர்மறை அரசியல் போக்கை இவர் எதிர்கொள்கிறார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் 3 பெரிய சட்டமன்றங்களில் பாஜக பெரிய அளவுக்கு ஒன்றும் இல்லை என்பதால், கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் நிதின் நபினைப் பார்த்து  நக்கலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இடியாப்பச் சிக்கலிலிருந்து ஓர் ஆண்டு அவர் தப்பித்து விட வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.