விளையாட்டு
27 Dec 2025, 4:49 pm

2 நாளில் நிறைவடைந்த “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டி 15 ஆண்டுகளுக்குப் பின் ஆஸி., மண்ணில் இங்கிலாந்து அபார வெற்றி

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4ஆவது டெஸ்ட் போட்டி “பாக்சிங் டே (கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி நடை பெறும் போட்டி)” ஆட்டமாக வெள்ளிக் கிழமை அன்று தொடங்கியது. 20 ரன்களுக்குள் சுருண்ட ஆஸி., இங்கி., இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் கள மிறங்கிய ஆஸ்திரேலிய அணி இங்கி லாந்து அணியின் ஜோஸ் டங் (5 விக்.,) பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 45.2 ஓவர்களில் 152 ரன்க ளுக்கு ஆட்டமிழந்தது. நேசர் (4 விக்.,), போலந்து (3 விக்.,), ஸ்டார்க் (2 விக்.,) ஆகிய வீரர்களின் வேகத்தில் ஆஸ்திரேலிய அணி சீற, இங்கி லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 29.5 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. 42 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங் கிய ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்து இருந்தது. போலந்து (4 ரன்கள்), ஹெட் (0) ஆகியோர் களத்தில் இருந்த னர். தொடர்ந்து இந்திய நேரப்படி சனி யன்று அதிகாலை 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. கார்ஸ் (4 விக்.,), கேப்டன் ஸ்டோக்ஸ் (3 விக்.,), ஜோஸ் டங் (2 விக்.,) அட்கின்சன் (1 விக்.,) உள்ளிட்ட இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் மாறி, மாறி தாக்குதல் நடத்த ஆஸ்திரேலிய அணி யின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டாக சரிந்தது. தொடக்க வீரர் ஹெட் (46 ரன்கள்), கேப்டன் ஸ்மித் (24 ரன்கள்) ஓரளவு தாக்குப்பிடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 2ஆவது இன் னிங்சில் 34.3 ஓவர்களில் 132 ரன்களு க்கு ஆட்டமிழந்து, இங்கிலாந்து அணி யின் வெற்றிக்கு 175 ரன்கள் நிர்ண யித்தது. 15 ஆண்டுகளுக்குப் பின் எட்டக்கூடிய இலக்குடன் கள மிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (37 ரன்கள்) மற்றும் பென் டக்கெட் (34 ரன்கள்) இணைந்து 51 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். நடுவரிசையில் ஜோ ரூட் (15 ரன்கள்) மற்றும் ஸ்டோக்ஸ் (2 ரன்கள்) விரைவில் ஆட்ட மிழந்தாலும், அறிமுக வீரர் ஜேக்கப் பெத்தேல் (40 ரன்கள்) பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பாதை க்கு அழைத்துச் செல்லும் வழியை அமைத்துக் கொடுத்தார். இறுதியில் ஹாரி புரூக் (18 ரன்கள்), ஜேமி ஸ்மித் (3 ரன்கள்) வெற்றியை உறுதி செய்ய, இங்கிலாந்து அணி 32.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை (178 ரன்கள்) எளி தாக எட்டி, 4 விக்கெட் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றது. 2010ஆம் ஆண்டுக்குப் பின் ஆஸ்தி ரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்றது இல்லை. 15 ஆண்டுகளு க்குப் பின் “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டிவெற்றி பெற்றதன் மூலம் நீண்ட கால அவப்பெயரை, நற்பெய ராக மாற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

ஊடகங்களுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து தொடரை இழந்தது போல சோகத்தில் ஆஸி.,

மது அருந்தியதால் தொடர் தோல்வி மற்றும் ஆஷஸ் தொடரை இழந்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த ஒரு வாரமாக விளையாட்டு ஊடகங்களில் விமர்சனப் பொருளாக டாப் டிரெண்டிங்கில் இருந்தது. இதற்கு பதிலடியாக வரலாற்றுச் சிறப்புமிக்க “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்று விளையாட்டு ஊடகங்க ளுக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் பிரம்மாண்ட பதிலடி கொடுத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. குறிப்பாக ஆஷஸ் தொடரைக் (4 போட்டிகளில் முடிவில் 3-1) கைப்பற்றிய சூழலிலும் “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டி தோல்வியால் தொடரை இழந்தது போல ஆஸ்திரேலிய வீரர்கள், ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.