முந்தய பக்கம்

எறும்புகளின் புது வருகை

29 Nov 2025, 1:28 pm
எறும்புகளின் புது வருகை

எறும்புகளின் புது வருகை

அருணாச்சல் பிரதேசத்தின் மலைக்காடுகளில் புதிதான 3 வகை எறும்புகளை இமாச்சலப் பிரதேசப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோகிந்தர் ரில்டா தலைமையிலான எறும்பியல் ஆய்வுக்குழுவினர்(Myrmecologists) கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவின் எறும்பு மனிதர் என்று அழைக்கப்படும் பேராசிரியர் பாரதிதான் இந்த ஆய்வைத் தொடங்கி வைத்தார் என்று கூறும் ரில்டா, இவை பாறை எறும்புகளாகும். மிகச்சிறிய அளவிலான இந்த எறும்புகள் பெரும் குளிர்ப்பகுதிகளில் வசிக்கின்றன என்று விளக்குகிறார். வெற்றிகரமாக ஆய்வு மேற்கொண்டதற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு சார்பாக அவரைச் சந்தித்து வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரே சாதி “மனிதம்” ஒரே மதம் “அன்பு”  மனம்தான் ஒரே “மொழி” உண்மையான “தலைமை”  என்பது சேவை.  நடிகை ஐஸ்வர்யா ராய் புட்ட பர்த்தியில் பிரதமர் மோடியின் முன்பாகப் பேசியது.

நான் அவனில்லை!

ஆப்பிரிக்க நாடான நமீபியாவின் உள்ளூர்த் தேர்தலில் அடால்ஃப் ஹிட்லர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறையும் அவரே வாகை சூடினார். “இந்தப் பெயரை வைக்கும்போது, இதன் பின்னணியை என் தந்தை உணரவில்லை. எனக்கும் பிற்காலத்தில்தான் அது தெரிந்தது. பெயர் அதுவாக இருந்தாலும், நான் அவரைப் போல் அல்ல” என்கிறார். இவருடைய துணைவியார், “அடால்ஃப்” என்று அழைக்கிறார். நமீபியாவில் இடதுசாரிக் கட்சிதான் ஆட்சியில் உள்ளது. இவரும் தன்னை ஒரு ‘இடதுசாரி’ என்று பெருமையுடன் சொல்கிறார்.

டிரம்ப் பார்வைக்கு...

இரண்டாம் உலகப் போர் நிறைவு பெற்று, பெரும் வல்லரசாக அமெரிக்கா உருவெடுத்திருந்த காலமது. புரட்சி நிகழ்ந்து அனைத்துத் துறைகளிலும் மகத்தான சாதனைகளைக் புரிந்திருந்த சோவியத் யூனியனில் பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாக இருந்தனர். அதே 1950களில் அமெரிக்காவில் பெண்கள், ஆண்களுக்குப் பணிவிடை செய்பவர்களாகவே அடக்கி வைக்கப்பட்டிருந்தனர். நவம்பர் புரட்சி தினத்தையொட்டி அமெரிக்காவில் கம்யூனிச எதிர்ப்பு வாரத்தை அனுசரிக்குமாறு டிரம்ப் கோரியுள்ள நிலையில் இந்தப் படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram