“அம்பேத்கர் என்றாலே பாஜகவிற்கு பயம்”
6 Dec 2025, 2:48 pm
<p><strong>“அம்பேத்கர் என்றாலே பாஜகவிற்கு பயம்”</strong> </p>
<p>பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபல இந்திரா காந்தி மைதானத் தில் அம்பேத்கர் நினைவு தினமான டிசம்பர் 6 அன்று (வெள்ளி) “மகாபரி நிர்வான் திவாஸ் (Mahaparinirvan Diwas - அம்பேத்கரின் நினைவு தினம்)” நிகழ்வை நடத்த “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டு இருந்தது. இதற்கான அனு மதியையும் அக்கட்சி பெற்றுள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் இந்நிகழ்வி ற்கு ஆளும் பாஜக அரசு திடீரென தடைவிதித்தது. இதனால் இந்திராகாந்தி மைதானத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்படவில்லை. இந்த விவகாரத்திற்கு கடும் கண்ட னம் தெரிவித்த சமாஜ்வாதி மூத்த தலை வர்கள் ஷியாம் லால் பால், ராஜேந்திர சவுத்ரி, ஆர்.கே.சவுத்ரி, டாக்டர் ராம் மனோகர் லோஹியா ஆகியோர் செய்தி யாளர் சந்திப்பின் போது மேலும் பேசுகை யில்,“அம்பேத்கர் என்றாலே பாஜக விற்கு பயம். அதனால் உத்தரப்பிர தேச பாஜக அரசின் அழுத்தத்தால் அம் பேத்கர் தின நிகழ்வு ரத்து செய்யப் பட்டுள்ளது. இது தலித் அரசியல் பிரகட னத்தைத் தடுப்பதற்கான “சர்வாதிகார” நடவடிக்கை ஆகும். பாஜக அம்பேத் கர் பெயரை வாக்குகளுக்காக மட்டுமே பயன்படுத்துகிறது” என குற்றம்சாட்டினர்.</p>
