முந்தய பக்கம்

பிறரை நேசிக்கும் நோய்!

3 Jan 2026, 2:20 pm
                   பிறரை  நேசிக்கும் நோய்!
<p><strong>பிறரை &nbsp;நேசிக்கும் நோய்!</strong></p> <p>இந்நாட்களில் எனக்கு &nbsp;ஒரு நோய் வந்திருக்கிறது. &nbsp;ஆங்கிலத்தை வெறுக்க &nbsp;நினைக்கிறேன்-ஆனால் &nbsp;ஷேக்ஸ்பியர் அதை &nbsp;அனுமதிப்பதில்லை. &nbsp;முஸ்லிம்களை வெறுக்க &nbsp;நினைக்கிறேன்-ஆனால் &nbsp;மிர்சா காலிபின் &nbsp;உருது கவிதைகள் &nbsp;அதை தடுக்கின்றன. &nbsp;சீக்கியர்களை வெறுக்க &nbsp;நினைக்கிறேன்-ஆனால் &nbsp;குருநானக்கின் உபதேசங்கள் &nbsp;என் கண்களை நிரப்புகின்றன. &nbsp;கம்பன், தியாகராஜர், &nbsp;முத்துசாமி தீட்சிதர் &ldquo;அவர்கள் நம்மவர்கள் அல்ல&rdquo; என்று மனம் ஆயிரம் முறை &nbsp;சொன்னாலும், உண்மையை நோக்கிய &nbsp;அவர்களின் சொற்கள் என்னை &nbsp;வெறுக்க விடுவதில்லை. &nbsp;என் முதல் காதலை &nbsp;வெறுக்க நினைக்கிறேன்- &nbsp;ஆனால் இப்போது அவள் என் சகோதரி போலத் &nbsp;தோன்றுகிறாள். &nbsp;எனக்கு வந்த நோய் &nbsp;பிறரை நேசிக்கும் நோய். இது அடுத்த நூறு &nbsp;ஆண்டுகளுக்கும் நமது தேசிய &nbsp;நோயாகட்டும். &nbsp;இதற்கு மருந்து எதுவும் &nbsp;கண்டுபிடிக்கப்பட வேண்டாம். ஏனெனில், இந்த நோய் என்னை நேராக &nbsp;சொர்க்கத்திற்கே &nbsp;அழைத்துச் செல்கிறது. &nbsp;-கவிஞர் நாராயணன் &nbsp;(இந்தி மூலத்திலிருந்து &nbsp;ஆங்கிலத்தில் பேரா.இராஜேந்திரசென்னி)</p>
Share
FacebookXWhatsAppTelegram