தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“பரிவுணர்வின் மேன்மை”

28 Mar 2026, 4:13 pm
“பரிவுணர்வின் மேன்மை”
<p><strong>&ldquo;பரிவுணர்வின் மேன்மை&rdquo;</strong></p> <p>வீடு வெறும் கட்டடம் அல்ல;அது தலைமுறைகளின் நினைவுச் சேகரம்.மனித வாழ்வோடு இரண்டறக் கலந்ததே, வீடென்ற காலக்கூடு. வாழ்வென்பது பாசம்,வெறுப்பு, ஏமாற்றம்,துரோகம், துன்ப துயரங்கள் கொண்டது.அவற்றை ஆற்றுப் படுத்தும் உள்ளார்ந்த பரிவுணர்வின் (sentiment) விழுமியத்தைப் பேசும் நார்வே சினிமாவே&rdquo;Sentimental Value&rdquo;. அது இரண்டாம் உலகப்போர் காலகட்டம்.நார்வேயின் ஒஸ்லோவில் கரீன்,எடித் என்ற இரு சகோதரிகள் பாரம்பரிய வீட்டில் வசிக்கிறார்கள். கரீன் கணவனை இழந்தவள்.குஸ்டாவ் என்ற மகன் உண்டு.நாஜி எதிர்ப்புப் போராளியான கரீனை நாஜி அரசு கைது செய்கிறது; வதை முகாம் கொடுமையால் மனச்சிதைவுக்கு உள்ளாகி கரீன் தற்கொலை செய்து கொள்கிறாள்.ஆதரவற்ற குஸ்டாவ் சித்தியிடம் வளர்கிறான்.சித்தி எடித்தின் இறப்புடன் முதல் தலைமுறை முடிவு பெறுகிறது. தனது தூக்கமின்மை நோய்க்காகச் சிகிச்சை தரும் சீசல் என்பவளை மணந்து நோரா,ஆக்னஸ் என்ற இரு பெண் குழந்தைகளுக்குத் தந்தை யாகிறான் குஸ்டாவ்.மனைவியுடன் அவன் அடிக் கடி சண்டை போடுவதால் மனைவி சீசல் தற்கொ லைக்கு முயல்கிறாள். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.ஒரு கட்டத்தில் குஸ்டாவ் வீட்டை விட்டு ஸ்வீடனுக்குச் சென்று விடுகிறான். நோராவும் ஆக்னசும் தாயின் அரவணைப் பில் வளர்கிறார்கள். பருவமடைந்த நோரா நாடக நடிகை ஆகிறாள்.ஆக்னஸ் பேராசிரியை.இவளுக்குத் திருமணம் ஆகி ஃபெலிக்ஸ் என்ற மகன் இருக்கிறான்.சக நடிகனான நோராவின் காதலன் அவளைப் பிரிந்துவிடுகிறான். பாட்டி கரீனின் தற்கொலை, தாயையும், குழந்தைகளான தங்களையும் கைவிட்டுச் சென்ற தந்தை மீதான வெறுப்பு, காரணமின்றி பிரிந்து போன காதலன் தந்த கசப்பான அனுபவம் ஆகியவற்றால் திருமண உறவு மீது வெறுப்புக்கொள்கிறாள் நோரா.சகோதரியோடு வீட்டில் வாழ்ந்த நினைவுகளே இவளுக்கு ஆறுதல். இந்நிலையில் அவளது தாய் இறந்து விடுகிறாள்.பல்லாண்டு கழித்து வரும் குஸ்டாவ்,வீட்டில் நடைபெறும் இந்தத் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறான். இப்போது குஸ்டாவ் ஸ்வீடனில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்.நோராவும் ஆக்னசும் பாசம் ஒருபக்கம்; இனம்புரியா வெறுப்பு ஒருபக்கம் என்ற இருவேறு மனநிலைகளில் தந்தையை வரவேற்கிறார்கள். இரண்டு தலைமுறைகளாய்க் குடும்பத்தில் நிகழ்ந்த துன்ப துயரங்களை வைத்து குஸ்டாவ் ஒரு திரைக்கதையை உருவாக்குகிறான். இத்திரைக்கதை யை மகள்களிடம் வழங்கி,கதையின் முக்கிய பாத்திரத் தில் நோராவையும், ஆக்னசின் மகனையும் நடிக்கக் கோருகிறான்.ஆனால் அவன் மீதான வெறுப்பில், மகள்கள் ஸ்கிரிப்டை படிக்காமலே,அவனது வேண்டுகோளை நிராகரிக்கிறார்கள். எனவே,நோராவின் பாத்திரத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை ரேச்சலை ஒப்பந்தம் செய்கிறான்.ஆனால் நாடக நடிகையான நோராவின் நடிப்பைப் பார்த்து வியக்கும் ரேச்சல், இந்தப் பாத்திரப் படைப் புக்கு நோராவே சரியான தேர்வு எனக் கூறி விலகு கிறாள். இந்நிலையில் திரைப்பட உருவாக்கத்திக்குத் தடையாக இருந்த உறவுச் சிக்கல்களும், கசப்புணர் வுகளும் விலகுவதே மீதக் கதை. மூன்று தலைமுறைக் கதைகளின் மவுன சாட்சி யாக இங்கே வீடு இருக்கிறது. நோரா,தனது பூர்வீக வீட்டின், மேல்தள படிக்கட்டுகளில் ஓடும்போது, வீட்டின் வயிறு குலுங்குவதாகவும்; வீட்டின் பின்புற வேலியைத் தாண்டி குறுக்கு வழியில் பிரதான சாலைக்கு செல் வதை,தனது வீடு பார்ப்பதாகவும் உணர்கிறாள். சுவரைக் கைகளால் உரசும் போது, வீடு சிரிக்கிறது.தரையில் குதித்து விளையாடும் போது அதற்கு வலிக்கிறது.கண் ணாடி சாளரங்கள் அடைக்கப்பட்டால் மூச்சு முட்டுகிறது. உறவுகள் கூடும்போது வீடு கனமாகிறது.யாருமில்லாத போது அது இலகுவாகிறதென,தோழியின் உடலாக வே வீட்டை நேசித்து சிறுவயதில் கட்டுரை வரை கிறாள் . பாசத்திற்குரிய பாட்டி,தாய் ஆகியோரின் இறப் பும்,பெற்றோரின் சண்டைக்கான காரணத்தினை அறிந்த சாட்சியாகவும் வீடு இருப்பதாக,நோரா பெரிய ஆளான பின்பும் நம்புகிறாள்.ஆக,நோரா வீட்டை உணர்வுகளின் சின்னமாக கருதுகின்ற அளவிற்கு,இயக்குநர், வீட்டை ஒரு உயிருள்ள பாத்திரமாகப் படைத்துள்ளார். பாட்டி,தாய் அனுபவித்த வலிகளை நேரடியாக பார்த்து உணர்ந்தவர் நோரா.எனவே, பாட்டியின் பாத்திரத்திற்கு ஏற்றவர் நோராவென உறுதியாக நம்பு கிறார் ஹாலிவுட் நடிகை ரேச்சல். எப்பாத்திரத்திரத்தை ஏற்றாலும், அதோடு பொருந்தி போகிறவரே சிறந்த நடிகை.ஆனால்,வலியை அனுபவித்தவர் தான், அப்பாத்திரத்தை நடிப்பால் உயிர்ப் பிக்க முடியு மென ரேச்சல் கூறுவது, கலையின் மீதான அவளது நேசிப்பின் உச்சம். விருந்தினர்களின் எச்சில் பாத்திரங்களை சகோ தரிகள் சுத்தப்படுத்துகின்றனர்.அதே வேளையில், தந்தை குஸ்டாவ் வீட்டின் பரணிலிருந்து அவரு டைய நினைவுப் பொருட்களை எடுத்துச் செல்கிறார். இக்காட்சி இவர்களுக்குள் மறைக்கப்பட்ட துயரங் களை களைவதற்கான முயற்சியை மூவரும் தொடங் கிவிட்டனர் என்பதன் குறியீடு. நாடகமேடையில் நடிப்பதற்கு வருமுன் நோரா வுக்கு ஏற்படும் ஆர்வப் படபடப்பை, மிக நேர்த் தியாக நடித்திருப்பார், நோரா பாத்திரமேற்ற ரெனாட் &nbsp;ரீன்ஸ்வ். தனது சகோதரி நோராவோடு இளம்பருவ நினைவுகளை ஆக்னஸாக நடித்த இங்கா இப்ஸ் டாட்டர் அசைபோடுகையில், கண்ணால் பேசிக் கொண்டே கலங்குகின்ற காட்சி அழகு. குஸ்டாவின் தாய் கரீன் பாத்திரத்தின் தன்மை யை திரைக்கதையில் படித்துணர்ந்து, இயக்குநர் முன் நடித்து காட்டுகிறார் ரேச்சல்.அப்போது கன்னம் சிவந்து, கண்ணீர் தானாக வருகின்ற காட்சியில், உன்னத நடிப்பை தந்துள்ளார் ரேச்சலாக வரும் ஹேலி பேனிங்.இவர்,2026 சிறந்த துணை நடிகைக் கான ஆஸ்கார் விருதுக்கு இப்படத்திற்காக பரிந்துரைக் கப்பட்டுள்ளார். மகள் நோரா மற்றும் நடிகை ரேச்சல் ஆகியோர், படத் தில் நடிக்க மறுக்கும் போது,குஸ்டாவாக நடித்துள்ள ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்,மெல்லிய கோபத்தைக் கூட வெளிப்படுத்தாமல், சற்று கசங்கிய பூப்போல் முகத் தை மாற்றிக் கடந்து செல்வார்.இது அவரது மெரு கேறிய நடிப்பு. ஜோஸீம் ட்ரைரர்,திரைக்கதை இயக்கத்தை இன்க் மார் பெர்க்மான் (Ingmar Bergman) பாணியில் அமைத் துள்ளார். ஒவ்வொரு காட்சித் தொடருக்குமிடையே, திரையை இருட்டாக்கி (fade to black) அடுத்த காட்சிக்குச் செல்லும் யுக்தியை கையாண்டு சிறப்பான நவீன வடிவிலான சினிமாவை தந்துள்ளார்.சிறந்த சாதனை இயக்குநருக்கான 2026 ஆஸ்கார் விருதுக்கு இப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். &nbsp;மூன்று தலைமுறைகளைக் கொண்ட நீண்ட கதை யை, தன்னுடைய சிறப்பான படத்தொகுப்பின் மூலம் இரண்டேகால் மணி நேர படமாக்கியுள்ளார் ஒலிவர் பஃகே. இசை,ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். 2026 சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை நார்வே வரலாற்றில் முதன்முறையாக இப்படம் வென் றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முபியில் உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.