முந்தய பக்கம்

பாஜக எனும் பாறாங்கல்

25 Mar 2026, 5:29 pm
           பாஜக எனும் பாறாங்கல்
<p><strong>பாஜக எனும் பாறாங்கல்</strong></p> <p>&ldquo;பாஜக எனும் மிகப்பெரிய பாராங்கல்லைக் கட்டிக்கொண்டு தண்ணீரில் குதிப்ப வர்கள் மூழ்கிப் போவார்கள்; ஆனால் பாராங்கல்லுக்கு எதுவும் ஆகாது&rdquo; எனத் திரைப்படக் கலைஞர் எஸ்.வி.சேகர் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் நையாண்டியாகத் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதன் சுருக்கம் இதோ: பாஜகவின் உண்மை முகம் இந்திய அளவில் அதிகமான பாலியல் குற்றங்கள் எங்கு நடக்கிறது தெரியுமா? பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தான். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை வைத்துத்தான் பாஜக ஆட்சி நடத்துகிறது. இவர்களின் ஆட்சி சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு ஆட்சி. தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது; ஏனென்றால் இவர்கள் அனைவரும் ஒரே கூட்டணிக் கூட்டாளிகள் தான்! விஜய்யின் முரண்பாடுகள் &ldquo;யாரும் இலவசம் வாங்காதீங்க&rdquo; என்று கூறிய விஜய், இப்போது தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பவுன் மோதிரம் போடுவேன் என்கிறார். தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் குழந்தைகள் பிறக்கின்றன; அப்படியென்றால் ஒரு வருடத்திற்கு எத்தனை பவுன் மோதிரம் போட வேண்டும்? முரண்பாடுகளின் மொத்த உருவமாக விஜய் இருக்கிறார். விஜய் கட்சியில் வந்து சேர்ந்தவர்கள் எல்லாம் மற்ற &nbsp;கட்சிகளிலிருந்து விரட்டப்பட்ட வர்கள் அல்லது வேறு வழியில் லாமல் இங்கு வந்து ஒட்டிக் கொண்டவர்கள். இவர்களை வைத்துக் கொண்டு எப்படி வெற்றி பெற முடியும்? தொப்பி போட்டுக்கொண்டு கஞ்சி குடிக்கும் விஜய், புதுச்சேரியில் ஒரு முஸ்லிமுக்குக் கூட சீட் தர வில்லை. பிறகு எப்படி அவர் சிறுபான்மையின ருக்குச் சாதகமாகப் பேச முடியும்? &nbsp;ரயில் கட்டணக் கொள்ளையும் பெட்ரோல் விலையேற்றமும் தேஜஸ் ரயிலில் டிக்கெட் விலை ₹2,000; ஆனால் இட்லி, வடையை வாயில் வைக்க முடியவில்லை. ரயில் என்றால் சாமானிய மக்கள் செல்லும் இடம் என்பதை மாற்றிவிட்டார்கள். தேர்தல் முடிந்த பிறகு குறைந்தபட்சம் பெட்ரோல் விலையை ₹10-ம், காஸ் சிலிண்டர் விலையையும் உயர்த்துவார்கள். மோடிக்கு எரிவாயுப் பிரச்சனை கிடையாது; நாம்தான் வரிசையில் நிற்கிறோம்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram