தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘டபுள் எஞ்சின்’ எனும் ‘டப்பா எஞ்சின்’ தமிழ்நாட்டில் ஒருநாளும் ஓடாது! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

24 Jan 2026, 3:38 pm
‘டபுள் எஞ்சின்’ எனும் ‘டப்பா எஞ்சின்’ தமிழ்நாட்டில் ஒருநாளும் ஓடாது! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
<p><strong>&lsquo;டபுள் எஞ்சின்&rsquo; எனும் &lsquo;டப்பா எஞ்சின்&rsquo; தமிழ்நாட்டில் ஒருநாளும் ஓடாது! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!</strong></p> <p>சென்னை, ஜன.24- &ldquo;பிரதமர் நரேந்திர மோடி சொல் லும் &lsquo;டபுள் எஞ்சின்&rsquo; எனும் &lsquo;டப்பா எஞ்சின்&rsquo; ஒருநாளும் தமிழ்நாட்டில் ஓடாது!&rdquo; என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையையொட்டி, &nbsp;அவரிடம் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய மான கேள்விகளை எழுப்பியிருந்தார். &ldquo;தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய ரூ.3,458 கோடி சமக்ரசிக்ஷா கல்வி நிதி எப்போது வரும்?; தொகுதி மறு வரையறையில் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற &nbsp;உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து &nbsp;எப்போது வரும்?; பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுந ரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? மாநிலங்கள் மீது நிதிச் சுமை யை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வா தாரத்தை ஒழித்துக் கட்டும் &lsquo;விபி-ஜி ராம் ஜி&rsquo; திட்டம் கைவிடப்படும்&rsquo; என்ற வாக்குறுதி எப்போது வரும்?; பத்தாண்டுகளாக &lsquo;இன்ச் இன்ச்&rsquo;சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை எய்ம்ஸ் (AIIMS) எனும் &nbsp;எட்டாவது உலக அதிசயம் எப்போது &nbsp;எங்கள் கண்முன் வரும்?&rdquo; - என &nbsp;இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எழுப்பி இருந்தார். ஆனால் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்காத பிரதமர் நரேந்திர மோடி, &ldquo;பாஜக - என்டிஏ &nbsp;டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே &nbsp;ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவோம்&rdquo; என கூறியுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியின் &nbsp;இந்தப் பேச்சுக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத் துள்ளார். சமூகவலைதள பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில், &ldquo;பிரதமர் சொல்லும் &lsquo;டபுள் எஞ்சின்&rsquo;&rdquo; எனும் &lsquo;டப்பா எஞ்சின்&rsquo; தமிழ்நாட்டில் ஓடாது!&rdquo; என்று முதலமைச்சர் கூறி யுள்ளார். பிரதமர் அவர்களே&hellip; ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத் தனை தடைகளையும் தகர்த்தெறிந்து தான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க&hellip; நீங்கள் சொல்லும் &lsquo;டபுள் எஞ்சின்&rsquo; மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகாரை விட, தமிழ்நாடு, கேரளம், தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் &lsquo;டப்பா எஞ்சின்&rsquo; நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட் டார்கள். தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது&rdquo; என முத லமைச்சர் தெரிவித்துள்ளார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.