தாயுமானவர் திட்டம்: அதிகாலை 7 மணி கட்டாயத்தால் ஊழியர்கள் மன உளைச்சல் – சிஐடியு கண்டனம்!
5 Jun 2026, 10:15 pm
<p>திருப்பூர், ஜூன் 5- </p><p>தாயுமானவர் திட்டம் மூலம் முதி யோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேசன் பொருட் கள் வழங்குவதில் அதிகாரிகள் கொடுக்கும் கூடுதல் நெருக்கடி யால் பல்வேறு குளறுபடிகள் ஏற்ப டுவதாகவும், இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் தமிழ் நாடு நியாயவிலைக் கடை ஊழி யர்கள் சங்கம் (சிஐடியு) வலியு றுத்தியுள்ளது.</p><p>இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கௌதமன் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாயுமானவர் திட்டம் மாதத்தின் முதல் வாரத்தில் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஊழியர்கள் காலை 7 மணிக்கே வந்து பொருட்களை ஏற்றிச் சென்று, 90 விழுக்காடு விநியோ கம் செய்ய வேண்டும் என அதிகா ரிகள் நிர்பந்திக்கின்றனர். ஆனால், அரசின் உத்தரவில் காலை 7 மணி என்று எவ்வித விதியும் இல்லை. நியாயவிலைக் கடைகளின் வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஆகும். மேலும், பிஓஎஸ் இயந்திரத்தில் பேட்டரி சார்ஜ் நில்லாமை, வயது முதிர்ந்தோருக்கு கைவிரல் மற்றும் கண் விழி ரேகை விழுவதில் உள்ள சிரமம் காரணமாக ஒரு கார்டுக்கு 15 நிமிடங்கள் வரை ஆகிறது. நெட் வொர்க் பிரச்சனைகளும் நீடிக் கின்றன. பெரும்பாலும் பெண் ஊழி யர்களே பணியாற்றும் சூழலில், காலை 7 மணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்ப டும் என அதிகாரிகள் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. 12 மணி நேரம் வேலை செய்யச் சொல்லி ஊழி யர்களை மன உளைச்சலுக்குள் ளாக்குகின்றனர். எனவே, கூட்டு றவு சங்கங்களின் மாநிலப் பதிவா ளர் இப்பிரச்சனையில் உடனடி யாக தலையிட்டுத் தீர்வு காண வேண்டும். இல்லையெனில், மாநி லம் தழுவிய போராட்டம் நடத்தப் படும் என எச்சரித்துள்ளார்.</p>
