தாயமங்கலம் பங்குனி திருவிழா மார்ச் 29 முதல் துவங்குகிறது
24 Mar 2026, 3:23 pm
<p><strong>தாயமங்கலம் பங்குனி திருவிழா மார்ச் 29 முதல் துவங்குகிறது </strong></p>
<p>சிவகங்கை, மார்ச் 24- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா தாய மங்கலம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனி திருவிழா மார்ச் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை 10 தினங்கள் நடை பெறுகிறது. தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தாய மங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும், பங்குனி திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறு வது வழக்கம். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். பக்தர்கள், அம்ம னுக்கு பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலி யிட்டும், அக்னிசட்டி எடுத்தல், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வருதல் போன்றவை நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து, மருத்துவ முகாம், காவல்துறை பாதுகாப்பு என சகலமும் செய்யப் பட்டுள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதான வசதி உள்ளது. கோயில் வளர்ச்சிக்காக ரூ.12 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு அறநிலையத்துறை அனுமதிக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த அனுமதி கிடைத்து விட்டால் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் தெரி வித்தார். </p>
