தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தவெக-வின் ‘பளபள’ பாச வலை!

17 Mar 2026, 3:26 pm
தவெக-வின் ‘பளபள’ பாச வலை!
<p><strong>தவெக-வின் &lsquo;பளபள&rsquo; பாச வலை!</strong></p> <p>அரசியல் களத்தில் &rsquo;தளபதி&rsquo; யாக காலடி எடுத்து வைத்த கையோடு, வாக்காளர்களின் மனதை வெல்ல குறுக்கு வழியைப் பிடித்தி ருக்கிறாரா தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்? திருச்செங்கோட்டில் பிடிபட்டுள்ள சில்வர் பாத்திர மூட்டை கள், &rdquo;புதிய அரசியல்&rdquo; பேசும் தவெக- வின் முகத்திரையை தொடக்கத்தி லேயே கிழித்து தொங்கவிட்டுள்ளது. திருச்செங்கோடு அருகே உள்ள வரகூராம்பட்டி அரசு அடுக்குமாடி குடி யிருப்பில், ஒரு வீட்டில் மட்டும் ஏதோ &lsquo;பளபள&rsquo;வென சத்தம் கேட்டுள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற தையல் பயிற்சிப் பள்ளி செயல்படும் அந்த &nbsp;வீட்டில், துணிகளுக்குப் பதிலாக நான்கு &nbsp;ராட்சத மூட்டைகளில் சில்வர் பாத்தி ரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெறுமனே பாத்திரங்கள் மட்டும் இருந்தால் பரவாயில்லை, அதில் தவெக தலைவர் விஜய் மற்றும் திருச்செங்கோடு தொகுதி வேட்பாளராகக் கருதப்படும் அருண்ராஜ் ஆகியோரின் திருமுகங் கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் &lsquo;கெத்தாக&rsquo; ஒட்டப்பட்டிருந்தன. &rdquo;மாற்றம் கொண்டு வருவோம்&rdquo; என்று மேடைக்கு மேடை முழங்கும் தவெக-வினர், அந்த மாற்றத்தை சில்வர் பாத்திரத்தின் மூலம் கொண்டு வர திட்டமிட்டிருந்ததுதான் இப்போ தைய ஹாட் டாபிக். &rdquo;வாக்காளர்க ளுக்கு தையல் சொல்லிக் கொடுக்க போகிறார்களா அல்லது பாத்திரங் களை உருட்டிப் போட போகிறார் களா?&rdquo; என அங்கிருந்த மக்கள் முணு முணுத்ததை கேட்க முடிந்தது. பறக்கும் படை &rsquo;ரெய்டு&rsquo; - பதறிய நிர்வாகிகள்! தகவல் அறிந்து விரைந்து வந்த &nbsp;தேர்தல் பறக்கும் படையினர் சோதனை யிட்டதில், உள்ளே இருந்த சுமார் 250க்கும் மேற்பட்ட பாத்திரங்கள் &rsquo;வெயில்&rsquo; அடிக்கும் அளவுக்கு மின் னின. வருவாய் கோட்டாட்சியர் லெனின் &nbsp;மற்றும் தேர்தல் பறக்கும் படைத் தலை வர் நிஷாந்த் தலைமையிலான குழு வினர், அந்த நான்கு மூட்டைகளையும். காவல்துறையினர் உதவியுடன் பறி முதல் செய்தனர். இன்னும் எத்த னையோ வீடுகளில் இப்படி &rsquo;பளபளக் கும்&rsquo; பாசவலைகள் பின்னப்பட்டிருக்கி றதோ என்ற சந்தேகத்தில், ஊரக காவல் ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையி லான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசியலுக்கு வந்தால் &rsquo;பழைய பாணியை&rsquo; ஒழிப்போம் என்று சொன்ன &nbsp;தவெக, இப்போது பழைய பாணியி லேயே பாத்திரங்களை இறக்கியுள்ளது அக்கட்சியின் தொண்டர்களே தர்ம சங்கடத்தில் நெளிகின்றனர். &rdquo;ஸ்கிரீ னில் மட்டும்தான் ஆக்ஷன் ஹீரோவா? &nbsp;அரசியலில் &rsquo;பாக்ஸ் ஆபிஸ்&rsquo; கலெ க்ஷன் செய்யப் பாத்திரங்களை நம்பி னால் எப்படி?&rdquo; என இணையவாசிகள் இப்போதே கிண்டலடிக்க தொடங்கி விட்டனர். மொத்தத்தில், தவெக-வின் இந்த சில்வர் பாத்திர அரசியல், திருச் செங்கோடு வட்டாரத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. (ந.நி)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.