தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

9 Dec 2025, 4:25 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மாநில அளவிலான கலைத் திருவிழா அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல்! உதகை, டிச.9- மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் பரிசு பெற்று அசத்தினர். நீலகிரி மாவட்டத்தில் 2025 – -26 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி வட்டாரம், மற்றும் மாவட்ட அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன. வட்டார அளவில் நாட்டுப்புற நட னம், பரதநாட்டியம், களிமண், காய்கறி சிற்பங்கள் வண்ணம்  தீட்டுதல், நகைச்சுவை அரங்கம், வில்லுப்பாட்டு தனிநபர் நடிப்பு, மெல்லிசை, இசைக்கருவி மீட்டுதல் போன்ற போட்டி கள் வகுப்பு வாரியாக நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். கடந்த மாத இறுதியில் மாநில அளவி லான போட்டிகள் கரூர், ஓசூர், சேலம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளி யாகின. இதில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள், 10 பேர், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 3 பேர் என, 13 பேர் பரிசு பெற்று அசத்தினர். வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு கல்வி அதிகாரிகள் மற்றும் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

கிராவல் மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை சேலம், டிச.9- செட்டி சாவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராவல் மண்  கடத்தப்படுவதாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரி வித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். சேலம் மாநகரம் அருகிலுள்ள செட்டிசாவடி, கோம்பைப் பட்டி டால்மியா மேக்னசைட் உள்ளிட்ட பகுதிகளில் பர்மிட் இல்லாமல் தொடர்ந்து மண் கடத்தல் நடத்தப்படுவதாக இப்ப குதியினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இருப்பி னும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படு கிறது. இதனையடுத்து மேற்கு சட்டமன்ற உறுப்பினருடன், பொதுமக்கள் மண் கடத்தும் இடத்திற்கு சென்று கிராவல் மண்  கடத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றார். பொதுமக்கள் வருவதை கண்ட அவர்கள் ஜேசிபி வாகனம் டிப்பர் லாரிகளை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். மேலும் இது சம்பந்த மாக மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என ஊர்  பொதுமக்கள் தெரிவித்தனர்.

கடைகளை ஏலம் விடுவதில் முறைகேடு

உதகை, டிச.9- உதகையில் புதிதாக அமைக்கப்பட்ட  கடைகளை ஏலம் விடுவதில் பல்வேறு முறை கேடுகள் ஏற்பட்டுள்ளதால், வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை என்சிஎம்எஸ்  வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட புதிய கடை கள் கட்டப்பட்டது. கட்டப்பட்ட புதிய கடைக ளில் கூட்டுறவு, ஆவினுக்கு ஒதுக்கிய பின், மீத முள்ள கடைகள் வியாபாரிகளுக்கு ஏலம் விட்டு ஒதுக்க கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்தது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த கடை ஒதுக்குவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. அதன்பின் திமுக அரசு பொறுப் பேற்ற பின், முறையாக ஏலம் விட்டு கடை கள் ஒதுக்குவார்கள் என வியாபாரிகள் எதிர் பார்த்தனர். இதில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உண்மையான வியாபாரிகள் பயன டையும் நோக்கில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியு றுத்தினர். டெண்டர் விடாமலும், அப்படி டெண் டர் விட்டாலும் தங்களுக்கு வேண்டியவர்க ளுக்கு ஒதுக்க வேண்டும் என அரசியல் கட்சி யினர் நிர்பந்தித்து வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. காத்திருந்த வியாபாரி களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கட்டப்பட்ட புதிய கடைகள் அனைத்தும் சிதிலமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகி றது. இதற்கிடையே, டெண்டர் ஆவணங்கள் மீண்டும் எடுக்கப்பட்டு பணிகளை துவக்கிய நிலையில், நிர்வாக அதிகாரி ஒருவர் தனக்கு 7 கடைகள் ஒதுக்க வேண்டும் என அடம்பி டித்து வருவதால் டெண்டர் பணி இழுப்பறி யில் உள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்க ளின் இணைப்பதிவாளர் சித்ரா கூறுகையில், புதிய கடைகளை ஒதுக்குவது பல்வேறு நிர் பந்தங்களால் தாமதமாகி உள்ளது. விரை வில் முறையாக ஏலம்விட்டு கடைகள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என் றார்.

விடுபட்ட குளங்களை அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் இணைக்க தவிச வலியுறுத்தல்

ஈரோடு, டிச.9- அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடு பட்ட குளங்களை இணைத்து தண்ணீர் நிரப்ப வேண்டுமென விவசாயிகள் சங்கம் வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு மாவட்டக்குழு கூட்டம், அண்மையில் நடைபெற்றது. இதில், மாநிலச் செயலாளர் பி.பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், அவிநாசி - அத்திக்கடவு திட் டம் 2024 இல் பயன்பாட்டிற்கு வந்தது. இத்திட் டத்தில் 6 நீரேற்று நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் நிறைய குளம், குட்டை கள் தண்ணீர் நிரப்பப்படாமல் விடுபட்டிருக்கி றது. நம்பியூர் மற்றம் கோபி வட்டத்தில் சில  பகுதிகளில் தண்ணீர் சரியாக வருவதில்லை என புகார் எழுந்தது. மேலும் சில குட்டைக ளில் தண்ணீர் விடுவதிலலை என்ற குறை பாடு இருந்தது. எனவே முறையாக தண்ணீர் வருவதற்கும், விடுபட்ட குட்டை, குளங்களில் தண்ணீர் விடுவதற்கும் மேலும் நிதி ஒதுக்கீடு செய்து முறையாக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் வனத்தை ஒட்டி யுள்ள பகுதிகளில் யானை, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் வாழை, கரும்பு, மக்காச்சோளம், தென்னை போன்ற பயிர் களை சேதப்படுத்தி வருகின்றனர். இதற்கான இழப்பீட்டு தொகையை முறையாக கணக் கீடு செய்து காலதாமதமின்றி வழங்க வேண் டும். மில்கி மிஸ்ட் கழிவால் பாதிப்பு பெருந்துறை தாலுகா, பட்டக்காரன்பா ளையத்தில் இயங்கி வரும் மில்கி மிஸ்ட்  பால் பொருட்கள் தொழிற்சாலை செயல் பட்டு வருகிறது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள  பெரும்பள்ளத்தில் விடுவதால், பட்டக்காரன் பாளையம், சுள்ளிபாளையம், சீனாபுரம், துடுப் பதி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குட்டைகளில் தண்ணீர் தேங்கி அப்பகுதியில் உள்ள கிணறு கள் மாசுபட்டு வருகின்றன. உடனடியாக இந்த ஆலையை மூட வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாளை மின்தடை ஈரோடு, டிச.9- ஈரோடு மாவட்டம், சிப் காட் துணை மின் நிலையத் தில் வியாழனன்று (நாளை)  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளது. இதனால் வாவிக் கடை, திருவாச்சி, சோளி பாளையம், கருமாண்டி செல்லிபாளையம், கந்தாம் பாளையம், கந்தாம்பாளை யம் புதூர், திருவேங்கிடம் பாளையம் புதூர், வள்ளியம் பாளையம், சுள்ளிப்பாளை யம், சென்னிமலை சாலை, குன்னத்தூர் சாலை, பவானி  சாலை, சிலேட்டர் நகர், ஓலப் பாளையம், ஓம்சக்தி நகர்,  மாந்தம்பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் வியாழ னன்று காலை 9 மணி முதல்  மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.