தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தட்டாஞ்சாவடியில் சிபிஐ வேட்பாளர் அ.மு.சலீம் இறுதி கட்டப் பிரச்சாரம் இடதுசாரிக்கட்சிகள் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம்

5 Oct 2026, 12:28 am
தட்டாஞ்சாவடியில் சிபிஐ வேட்பாளர் அ.மு.சலீம் இறுதி கட்டப் பிரச்சாரம் இடதுசாரிக்கட்சிகள் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம்

தட்டாஞ்சாவடியில் சிபிஐ வேட்பாளர் அ.மு.சலீம் இறுதி கட்டப் பிரச்சாரம் இடதுசாரிக்கட்சிகள் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம்

புதுச்சேரி,அக்.4- புதுச்சேரி தட்டஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் அ.மு.சலீம்ஞாயிறன்று(அக்.4) இறுதிகட்டப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல்பிரச்சாரம் துவங்கியதில் இருந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள்,ராஜாங்கம், கொளஞ்சியப்பன் ஆகியோர் தலைமையில் தேர்தல் பிரச்சாரக்குழுஅமைக்கப்பட்டு பிரச்சாரம் மு.சலீமுடன் வீதி வீதியாக சென்று இக்குழுவினர் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன்,தமிழ் மாநில செயலாளர் பெ.சண்முகம், புதுச்சேரி மாநில செயலாளர் ராமச்சந்திரன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், ஆகிய தலைவர்கள் தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். புதுவை சப்தர் ஷாஸ்மி கலைக்குழுவினரும், அரசியல் நையாண்டி பாடலுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இறுதி கட்ட பிரச்சாரம்

இந்த தொகுதியில் வாக்குப்பதிவுவரும் 6ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, ஞாயிறன்று (அக்.4) இறுதி கட்டமாக இடதுசாரி கட்சிகளின் சார்பில் புதுப்பேட்டையில் இருசக்கர மோட்டார் வாகன பிரச்சாரம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் ராமச்சந்திரன், பெரு

மாள், ராஜாங்கம், கொளஞ்சியப்பன், நாரா. கலைநாதன், பாலசுப்பிரமணியன், ராம்ஜி, அரிகிருஷ்ணன், சுப்பையா, ரவிச்சந்திரன், அந்தோணி,செல்வம், எழிலன் உட்பட திரளான இடதுசாரி கட்சியினர் தொண்டர்கள் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களில் வேட்பாளர் அ.மு.சலீமுடன் வீதி வீதியாக சென்று கதிர் அரிவாள் சின்னத்திற்கு இறுதி கட்ட வாக்குசேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பின்னர் தட்டாஞ்சாவடி அச்சகம்அருகில் வாகன பிரச்சாரம் நிறைவடைந்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.