தட்டாஞ்சாவடி இந்திய கம்யூ. வேட்பாளர் வீடு வீடாக பிரசாரம்
24 Sept 2026, 2:12 am

தட்டாஞ்சாவடி இந்திய கம்யூ. வேட்பாளர் வீடு வீடாக பிரசாரம்

புதுச்சேரி, செப்.23-தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்த லில் சிபிஎம் ஆதரவுடன் போட்டியிடும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அ.மு.சலீம் கவுண்டம்பாளையம் பகுதியில் வீடு வீடாக மக்களை சந்தித்து புதன்கிழமை (செப்-23) தீவிர வாக்கு சேகரித்தார்.

தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் மற்றும் குண்டுப் பாளையம் பகுதி மக்களை சந்தித்த வேட்பாளர் சலீம் புதுச்சேரியின் மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இடதுசாரி கட்சிகள் சார்பில் போட்டியிடும் தனக்கு கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், தன்னை தேர்வு செய்தால் மாநில வளர்ச்சிக்கு உறு

துணையாக இருப்பேன் என்றும் வாக்காளர்களிடம் உறுதியளித்தார்.

பிரசாரத்தின்போது சிபிஎம் மாநில செயலாளர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராஜாங்கம், கொளஞ்சியப்பன், சத்தியா, மாநிலக் குழு உறுப்பினர்கள் ராம்ஜி, ஜோதிபாசு, ஆனந்த்,சஞ்சய் உழ வர்கரை கமிட்டி உறுப்பினர்கள் அரி கிருஷ்ணன், சுரேஷ், சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, நிர்வாக குழு உறுப்பினர் எல்லை சிவக்குமார், மாநில பொருளாளர் வ. சுப்பையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் ரவி,அந்தோணி,எழிலன், ஜீவானந்தம் தட்டாஞ்சாவடி தொகுதி செயலாளர் செல்வம் உட்பட திரளான இடதுசாரி கட்சிகளின் தொண்டர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.