தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் கடந்த பொதுத்தேர்தலை விட 6.29 விழுக்காடு குறைவு!

1 hour before
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் கடந்த பொதுத்தேர்தலை விட 6.29 விழுக்காடு குறைவு!

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் கடந்த பொதுத்தேர்தலை விட 6.29 விழுக்காடு குறைவு!

புதுச்சேரி, அக். 6-புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இருதொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது தட்டாஞ்்சாவடி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அத்தொகுதியில் காலியானஇடத்திற்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை அமைதியான முறையில் நடைபெற்றது.

இத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அ.மு. சலீம் உட்பட மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தொகுதியிலுள்ள 26,921 வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக்கடமையை ஆற்றும் வகையில் 31 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறத் துணை ராணுவப் படையினரும், புதுச்சேரி மாநிலக் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், வாக்காளர்ளர்களின் வசதிக்காகக் குடிநீர், நிழற்குடைகள் மற்றும் ஓஆர்எஸ் கரைசல்உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் தேர்தல் ஆணையத்தால் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்புத் தகவல்களின்படி, மாலை 5மணி நிலவரப்படி 78.83 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் யாரும் வரிசையில் காத்திருக்காததால், டோக்கன்கள் எதுவும் வழங்கப்படாமல் குறித்த நேரத்தில் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

இறுதியில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்தம் 80.81 விழுக்காடுவாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் துறை முறைப்படி அறிவித்தது. கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது இத்தொகுதியில் 87.1 விழுக்காடுவாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு 6.29 விழுக்காடு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.