தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உழைக்கும் மக்களின் உரிமை மீட்பிற்கான தேர்தல்! - நாரா. கலைநாதன்

2 Oct 2026, 8:46 pm
உழைக்கும் மக்களின் உரிமை மீட்பிற்கான தேர்தல்! -  நாரா. கலைநாதன்

உழைக்கும் மக்களின் உரிமை மீட்பிற்கான தேர்தல்! - நாரா. கலைநாதன்

புதுச்சேரி அரசியலில் மீண்டும் ஒருமுறை சுயநலத்தின் உச்சமாகத் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் என்.ஆர். ரங்கசாமி இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, தட்டாஞ்சாவடி தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதன் மூலம் இந்தத் தேர்தல் உருவாக்கப்பட்டுள்ளது. தன் அரசியல் கணக்குகளுக்காகவும் அதிகாரப் பசிக்காகவும் ஒவ்வொரு முறையும் இதே போன்ற நாடகங்களை அரங்கேற்றுவது என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாடிக்கையாகிவிட்டது. இந்த நாடகத்தால் ஏழை, எளிய மக்களின் வரிப்பணமும், அரசு இயந்திரமும் கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுகின்றன. உழைக்கும் மக்களின் வியர்வையைச் சூறையாடும் இந்தத் தந்திர அரசியலை இடதுசாரி இயக்கங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றன.

சந்தேகத்தின் நிழலில் நீதி: ஊழலும் சொத்துக் குவிப்பும்!

என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது சிபிஐ மூலம் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுத் தன் பதவியை இழந்த இவர்கள், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சென்னை உயர்நீதிமன்றத்தால் அவசரகதியில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆவணங்களின்படி இவரது சொத்து மதிப்பு ₹344 கோடியாகும். மத்திய புலனாய்வுத்துறையால் விசாரிக்கப்பட்டு இரு நீதிமன்றங்களால் உறுதி செய்யப்பட்ட தண்டனை இப்படித் திடீரென மாறியது குறித்து மக்களிடையே கடுமையானசந்தேகமும் முணுமுணுப்பும் எழுந்துள்ளது. நீதி கேள்விக்குறியாகும் இந்தச் சூழலில், ஊழல்வாதிகளுக்கு மக்கள்தகுந்த பாடம் புகட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் விரோதக் கொள்கைகளும் கார்ப்பரேட் பாசமும்

2021 முதல் புதுச்சேரியில் ஆட்சியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ்–பாஜக கூட்டணி மக்களுக்கான எந்தப் புதிய திட்டத்தையும் கொண்டுவர வில்லை. மாறாக, மாநிலத்தின் வளங்களைத் தனியார்கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் சீரழிவான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. மின்சாரத் துறையைத் தனியார்மயமாக்குவது, காரைக்கால் துறைமுகத்தை அம்பானியிடம் ஒப்படைப்பது, சேதராப்பட்டு கரசூரில் ₹2,500 கோடியில் தனியார் பங்களிப்புடன் ஐடி வளாகம்கொண்டுவருவது, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைத் தனியார்மயமாக்குவது என மக்கள் நலன் முற்றிலுமாகப்புறக்கணிக்கப்படுகிறது.

இடதுசாரி இயக்கங்களின் தொடர் போராட்டத்தின் விளைவாகவே மூடப்பட்ட நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு, தற்போது அரிசியுடன் கோதுமை யும் வழங்கப்படுகிறது; இருப்பினும், கூடுதல் அத்தியா வசியப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்ற மக்களின் நீண்டகாலக்கோரிக்கையை முதலமைச்சர் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. மேலும், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் ஐடி வளாகம் என்ற பெயரில்அறிவிக்கப்பட்டுள்ள ₹725 கோடி திட்டம் முழுக்க முழுக்கத் தேர்தல் கால ஏமாற்று வேலை மட்டுமே என்பதைமக்கள் நன்றாக அறிவர்.

மது ஆலைகள், ரெஸ்டோபார்கள், கஞ்சா கலாச்சாரம்

மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கடுகளவும் கவனிக்காத இந்த அரசு, சமூகச் சீரழிவைஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 6 மது ஆலைகளைத் தொடங்க ஆர்வம் காட்டப்படுகிறது; இதில் ₹90 கோடி வரை பணம் கைமாறியுள்ளதாகவும், துணைநிலைஆளுநர் அனுமதி மறுத்ததால் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாகவும்தகவல்கள் கூறுகின்றன.

மறுபுறம், ரெஸ்டோபார் அனுமதிக்கு ₹15 லட்சம் வரை கையூட்டு பெறப்படுவதால் பார்கள்பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் கொலைச் சம்பவங்கள் அதிகரிப்பதோடு, பள்ளிமாணவர்களும் மாணவிகளும் பாரில் மது அருந்திவிட்டுப் பிடிபடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் முழுவதும் கஞ்சா விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது; மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கே கஞ்சா விற்பனை செய்யப்படுவதும், அவர்கள் அடிமையாவதும் மாநிலத்தின் எதிர்காலத்தைக்கேள்விக்குறியாக்குகிறது. மேலும், ₹2,000 கோடி போலி மருந்து ஊழலில் தொடர்புடையவர்களும் ஜாமினில்வெளியே வந்திருப்பது சட்டம்–ஒழுங்கின் சீர்கேட்டை அம்பலப்படுத்துகிறது.

விலைவாசி உயர்வும் சிஏஜி அறிக்கையின் பேரதிர்ச்சியும்

மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நசுக்கும் விதமாகக் குடிநீர் மற்றும் ஹோட்டல் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. குடிநீர்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ₹5 எனவும், காலாண்டு கட்டணம் ₹720 எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குடிநீர் தரம் மோசமாக இருப்பதுடன், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் முறையாகச் சுத்தம் செய்யப்படுவதும் இல்லை.தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கையின்படி, 57 துறைகள் மற்றும் பொதுத்துறைநிறுவனங்களில் ₹30.43 கோடி நிதி முறைகேடுகளும் தவறுகளும் நடந்துள்ளன. மேலும், ₹1,041.79 கோடி செலவுசெய்யப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் போன்ற மத்திய–மாநிலத் திட்டங்களிலும் கடுமையான குறைபாடுகள் நிலவுகின்றன.

வேலையின்மையும் சட்டம் – ஒழுங்கின் முற்றான வீழ்ச்சியும்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அரசுத்துறைகளில் 12,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், சொற்பமான பணியாளர்களே நியமிக்கப் பட்டுள்ளனர்; படித்த இளைஞர்களின் எதிர்காலம்கேள்விக்குறியாகியுள்ளது.மறுபுறம், சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது. முத்தியால்பேட்டை சிறுமி பாலியல்பலாத்காரம், வில்லியனூர் செந்தில்குமார், உருளையன்பேட்டை உமாசங்கர், பாக்கமுடையான்பட்டு மதன் படுகொலை போன்ற கோரச் சம்பவங்கள் இதற்குச் சாட்சியாகும். கடுமையான வெயிலில்பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படும் வேளையில், அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டும்தனி விதிவிலக்கு அளிக்கப்படுவது எதேச்சதிகார ஆட்சியின் வெளிப்பாடாகும்.

இடதுசாரி மாற்றமும் உழைக்கும் மக்களின் உரிமை மீட்பும்!

கடந்த பொதுத் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நாற்காலிச் சண்டையும் பதவி மோதலும் இடதுசாரிகளைப் புறக்கணிக்கச் செய்து, மீண்டும் என்.ஆர். காங்கிரஸ்–பாஜக ஆட்சி அமைய வழிவகுத்தது. இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது.தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் உழைக்கும் மக்களின் குரலைச் சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்ய, இடதுசாரி ஆதரவோடு போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அ.மு.சலீம் அவர்களுக்கு ‘கதிர் அரிவாள்’ சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.