தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாதம்பட்டி கண்மாயில் கொட்டப்படும் குப்பைகள் நீர்நிலை, நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம்

28 Oct 2026, 9:33 pm
தாதம்பட்டி கண்மாயில் கொட்டப்படும் குப்பைகள் நீர்நிலை, நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம்

தாதம்பட்டி கண்மாயில் கொட்டப்படும் குப்பைகள் நீர்நிலை, நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம்

விருதுநகர், அக்.28-விருதுநகர் அருகே தாதம்பட்டியில் உள்ள கண்மாயில் சிலர் தொடர்ந்து குப்பைகளைக் கொட்டி வருவதால், நீர்நிலையும் நிலத்தடி நீரும் பாதிக்கப் படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பெருமாள்ராஜ், கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

விருதுநகர் ஒன்றியத் துக்கு உட்பட்ட தாதம்பட்டி கிராமத்தில் பெரிய அளவிலான கண்மாய் உள்ளது. தற்போது இந்தக் கண்மாயில் கிராவல் மண் அள்ளப் பட்டுள்ளது. ஆனால், கண் மாயின் கரைகள் உயர்த் தப்படவில்லை.மேலும், கண்மாயின் கிழக்குப் பகுதியில் குப்பைகளைக் கொட்டக் கூடாது என ஊராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் சிலர் தொடர்ந்துஅதே இடத்தில் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். இதனால் கண்மாய் நீரும் நிலத்தடி நீரும் மாசுபடும் நிலைஏற் பட்டுள்ளது.

எனவே, கண்மாயில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், கண் மாயின் கரைகளை உயர்த்திப் பலப்படுத்துவதற்காக வருவாய்த்துறையினர் நிலத்தை அளந்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.