அதுதான் மறைந்து கூவுகிறதோ! - வரத.இராஜமாணிக்கம்
9 Nov 2025, 2:42 pm
<p><strong>அதுதான் மறைந்து கூவுகிறதோ!</strong></p>
<p>காக்காவின் கருப்பு நிற மும் கரைகின்ற சத்த மும் நம்மிள் பெரும் பான்மையோருக்கு பிடிப்பது இல்லை. ஆனால் கண்ணுக்கு தட்டுப்படாத குயிலை.. அதன் குர லோசையை.. அனைவரும் விரும்புகிறோம். காக்கா பிடிக்குமா குயில் பிடிக்குமா என்று கேட்டால் அனைவரது பதிலும் குயில் என்று தான் இருக்கும். ஆனால் வாழ்க்கைச் சித்திரம் வேறாக உள்ளது. காக்கா மரத்தின் உச்சியில் கூடு கட்டுகிறது. கூடு கட்ட சுள்ளி களைத் தேடி அலைகிறது. பாது காப்பாக கூடு கட்டிய பிறகு அதில் முட்டைகள் இடுகிறது. முட்டைகள் குஞ்சு பொரிக்கும் வரை அடை காக்கிறது. முட்டைகளை விட்டு குஞ்சுகள் வெளியேறிய பிறகு அதற்குரிய உணவை தேடித் தருகிறது. குஞ்சுகள் வளர்ந்து இறக்கைகள் முளைக்கும் வரை பாதுகாக்கிறது. குஞ்சுகளை கவர்ந்து செல்ல கழுகு போன்ற சக்தி மிக்க பறவைகள் வந்தாலும் அதை துரத்தி காக்கா விரட்டி அடிக்கிறது. மனிதர்களை விட காக்காவுக்கு தாய்மை உணர்வு அதிகம். தான் பெற்ற குஞ்சுகளை வளர்ப்பதிலும் பேணிப் பாதுகாப்பதிலும் ஒரு பெரும் போராட்டத்தை பொறுப்பு டன் நடத்துகிறது. ஆனால் குயிலின் கதையோ வேறு. காக்கா அசந்திருக்கும் நேரத் தில் காக்கா கூட்டில் முட்டைகளை இட்டுவிட்டு குயில் பறந்து விடு கிறது. அது குயில் முட்டை என காக்காவுக்குத் தெரியாது. கூட்டில் இருக்கும் முட்டைகள் அனைத் தும் தன்னுடையது தான் என குஞ்சு பொரிக்கும் வரை பாதுகாக்கி றது. குஞ்சு பொரித்த பிறகும் அனைத்து குஞ்சுகளும் தன்னுடை யது தான் என இரை கொடுத்து பத்திரமாக வளர்க்கிறது. குஞ்சுகள் வளர்ந்ததும் ஏனைய குஞ்சுகள் தன்னைப் போலவே கரைவதைக் கண்டு இனம் கண்டு கொள்ளும் காக்கா குயில் குஞ்சு குக்கூவென கூவுவதை அறிந்தும் அதற்கு இறக்கைகள் முளைத்து பறக்கும் வரை பாதுகாத்து வழி யனுப்புகிறது. காக்கா வளர்த்த குஞ்சு தான் குயிலாக கூவுகிறது. முட்டையிடு வதுடன் கடமை முடிந்தது என பறந்து விடும் குயிலின் குரலில் என்ன தான் இனிமை இருந்தாலும் அது காக்காவின் தாய்மை உணர்வுக்கு ஈடாகாது. காக்கா இல்லை என்றால் குயிலும் இருக் காது அதன் இனிமையான குரலோ சையும் கேட்காது. காக்காவை ஏமாற்றி தன் குஞ்சு களை குயில் வளர்ப்பதனால் தான் குயில் வெட்கப்பட்டு மரக்கிளை களுடன் ஊடே மறைந்து கூவு கிறதோ..?</p>
