கந்துவட்டி - சாதிய வன்கொடுமையால் இளைஞர் தற்கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய
23 May 2026, 10:37 pm

கந்துவட்டி - சாதிய வன்கொடுமையால் இளைஞர் தற்கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய

சிபிஎம் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்!

தஞ்சாவூர், மே 23- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், வாட்டாத்திக்கோட்டை அரு கில் உள்ளது கரம்பை மில்.

இந்த பகுதியைச் சேர்ந்த வர் சரவணன் (36). பட்டிய லினத்தைச் சேர்ந்த இவ ருக்கு கார்த்திகா (26) என்ற மனைவியும், லித்திகா ஸ்ரீ (6) என்ற பெண் குழந்தை யும் உள்ளனர்.

சரவணன் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று, சுரேஷ் என்பவ ருடன் இணைந்து கூட்டாக வெல்டிங், லேத் பட்டறை (ஒர்க் சாப்) நடத்தி வந்துள் ளார்.

இந்நிலையில், இவ ருக்குக் கடன் கொடுத்த கொண்டிகுளம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், சூரியன் கொல்லை பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் ஆகிய பைனான்சியர்கள், அசல் தொகையோடு சேர்த்து அதிக வட்டி கேட்டு சரவணனுக்குத் தொடர்ந்து நெருக்குதல் கொ டுத்து வந்துள்ளனர்.

மேலும், பார்ட்னர் சுரேஷும் பைனா ன்சியர்களுடன் சேர்ந்து கொண்டு, கடன் தொகைக்கு ஈடாகப் பட்டறையைத் தன் பெயருக்கு எழுதிக் கொடுத்து விட்டு விலகுமாறு சரவண னை நிர்பந்தித்து மிரட்டி யுள்ளனர்.

தற்கொலை கடந்த மே 14, 15 ஆகிய தேதிகளில், பைனான்சி யர்களான ஐயப்பனும், சத்ய ராஜும் சில நபர்களுடன் சேர்ந்து, நள்ளிரவு 11 மணிக்கு மேல் சரவணன் வீட்டிற்குச் சென்று கடனைத் திருப்பிக் கேட்டு மிரட்டியுள்ள னர்.

“பணத்தைத் தர முடியா விட்டால் உன் மனைவி, குழந்தையை அடகு வைக்க வேண்டியதுதானே” என்று கூறி, சாதிய ரீதியாக வும் இழிவுபடுத்தி அவமா னப்படுத்தி யுள்ளனர்.

தொடர்ந்து இரண்டு இரவு களாக நிகழ்ந்த சாதிய வன்கொடுமையாலும், வட்டி நெருக்குதலாலும், கூட்டாளி சுரேஷின் துரோகத்தாலும் மன உளைச்சலுக்கு ஆளான சரவணன், கடந்த மே 17 (ஞாயிறு) அன்று விஷம் அருந்தி தற்கொலை க்கு முயன்றார்.

உறவினர் கள் அவரை மீட்டு பட்டுக் கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தபோதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, தற்கொ லைக்குத் தூண்டிய கந்து வட்டி கும்பல், பார்ட்னர் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, குற்ற வாளிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, மே 18 அன்று மாலை சரவ ணனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நேரில் ஆறுதல் இச்சம்பவம் குறித்து அறிந்ததும், மே 19 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநி லச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரா வூரணி ஒன்றியச் செயலா ளர் வே.ரெங்கசாமி, ஒன்றி யக் குழு உறுப்பினர் மாணிக்கம் உள்ளிட்ட தோ ழர்கள், பாதிக்கப்பட்ட சரவணனின் குடும்பத்தி னரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இவ்வழக்கில் பைனான் சியர் சத்யராஜ் என்பவர் தற்போது கைது செய்யப் பட்டுள்ளார்.

ஆனால், முக்கி யக் குற்றவாளிகளான பார்ட்னர் சுரேஷ், பைனான்சி யர் ஐயப்பன் ஆகியோர் இன்னும் கைது செய்யப்பட வில்லை.

முன்னதாக சுரேஷ் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கியக் கோரிக்கைகள் இக்கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய சுரேஷ், ஐயப்பன் ஆகிய இருவரை யும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

கந்துவட்டி தடுப்புச் சட்டம் மற்றும் சாதிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Act) வழக்கை முழுமையாகப் பதிவு செய்து, உண்மை குற்றவாளிகள் தப்பாதவாறு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.

உயிரி ழந்த சரவணனின் மனைவி கார்த்திகாவிற்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு நீதி கிடைக்கும் வரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உறுதுணையாக நின்று தொடர்ந்து போராடும் எனத் தோழர்கள் தெரிவித்துள் ளனர்.