தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு பேருந்தில் சென்னை நோக்கிச் சென்ற தஞ்சை இளைஞர் மாரடைப்பால் மரணம் செங்கல்பட்டு மருத்துவமனையில் சோகம்!

22 May 2026, 1:29 am
அரசு பேருந்தில் சென்னை நோக்கிச் சென்ற  தஞ்சை இளைஞர் மாரடைப்பால் மரணம்  செங்கல்பட்டு மருத்துவமனையில் சோகம்!
<p><strong>அரசு பேருந்தில் சென்னை நோக்கிச் சென்ற தஞ்சை இளைஞர் மாரடைப்பால் மரணம் செங்கல்பட்டு மருத்துவமனையில் சோகம்!</strong></p><p>செங்கல்பட்டு, மே 21- தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், செங்கல்பட்டு அருகே திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகப் உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவருக்கு 24 வயதில் மனைவி உள்ளார். மணிகண்டன் சென்னையில் உள்ள தனது நண்பரைச் சந்திப்பதற்காகத் தஞ்சாவூரிலிருந்து திருச்சி வந்துள்ளார். பின்னர், திருச்சியிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்தில் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். மயங்கிய நிலையில் இளைஞர் பேருந்து செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பகுதியில் வந்தபோது, மணி கண்டன் தனது இருக்கையில் சுய நினைவின்றிச் சாய்ந்திருப்பதை அங்கிருந்த பயணிகள் கவனித்துள்ளனர். உடனே பேருந்தின் நடத்துனர், மணிகண்டன் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்ப முயன்றார். ஆனால், அவர் எவ்வித அசைவும் இன்றி இருந்துள்ளார். பேருந்து செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது, மணி கண்டனின் நிலைமை மிகவும் கவலைக்கிட மாக இருப்பதை உணர்ந்த ஓட்டு நரும் நடத்துனரும், பயணிகளின் ஒத்துழைப்போடு பேருந்தை நேராகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றனர். அங்கு மணிகண்டனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். 2 மணி நேரம் காத்திருந்த பயணிகள் இதற்கிடையே, மணிகண்டனின் உடல் மருத்துவமனையில் ஒப்படைக்கப் பட்டதைத் தொடர்ந்து, அந்த அரசு பேருந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனை வளாகத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தங்களின் பணிகளுக்குக் கால தாமதம் ஆனதால் அவதியுற்ற பயணிகள், பின்னர் அங்கிருந்து மாற்றுப் பேருந்துகள் மூலமாகத் தங்களது பயணத்தைத் தொடர்ந்து சென்னைக்குச் சென்றனர். சென்னையில் உள்ள நண்பரைப் பார்க்க ஆசையோடு வந்த இளைஞர், பேருந்துப் பயணத்தின்போதே நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.