தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தஞ்சாவூர் - விழுப்புரம் இரட்டைவழி பாதைக்கான ஆய்வு அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்க வேண்டும் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

15 May 2026, 11:00 pm
தஞ்சாவூர் - விழுப்புரம் இரட்டைவழி பாதைக்கான  ஆய்வு அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்க வேண்டும் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர் - விழுப்புரம் இரட்டைவழி பாதைக்கான ஆய்வு அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்க வேண்டும் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

கும்பகோணம், மே 15- தஞ்சாவூர்- விழுப்புரம் இடையே, இரட்டைவழி ரயில் பாதை அமைக்க கடந்த 2019 ஆம் ஆண்டு ஆய்வு பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன் பின் ஆய்வு பணிகள் கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

ஆனால் அப்பணிகள் இதுவரை நிறைவடையாமல் உள்ளன.

ஆய்வு பணி அறிக்கையுடன் விரிவான திட்ட அறிக்கையும், ரயில்வே வாரிய ஒப்புதலுக்கு அனுப்பப்படவேண்டும்.

இரட்டைவழி ரயில் பாதைக்கான ஆய்வுப் பணிகளை விரைவாக முடித்து திட்ட அறிக்கை தாக்கல் செய்ய தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு அறிவுறுத்த ஒன்றிய ரயில்வேதுறை அமைச்சரை தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு, கும்பகோணம் ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் அனுப்பியுள்ள கடிதத்தில், “தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே உள்ள ரயில் பாதையை, இரட்டை வழி பாதையாக மாற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மேலும் கால தாமதம் இன்றி தென்னக ரயில்வே உடனடியாக ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் இத்திட்டத்திற்கான ஒப்புதலை விரைவாக வழங்கவும் கேட்டுக் கொள்கிறோம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.