கேங்மேன் பணியாளர்களை களப்பணி உதவியாளர்களாக மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
16 Jun 2026, 11:14 pm
<p><strong>கேங்மேன் பணியாளர்களை களப்பணி உதவியாளர்களாக மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்</strong></p><p>தஞ்சாவூர், ஜுன் 16- தஞ்சாவூர் மணிமண்டபம் பகுதியில் உள்ள மின்வாரிய தலைமை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு, டி.என்.இ.பி எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திட்டத் தலைவர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திட்டச் செயலாளர் ராஜா மற்றும் மண்டலச் செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள 9,613 கேங்மேன் பணியாளர்களை களப்பணி உதவியாளர்களாகப் பணி மாற்றம் செய்ய வேண்டும் என்றும், மின்வாரியத்தில் காலியாக உள்ள 70,000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
