முந்தய பக்கம்

தஞ்சாவூரில் 120 தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு

13 Jul 2026, 9:11 pm
தஞ்சாவூரில் 120 தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு
<p><strong>தஞ்சாவூரில் 120 தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு </strong></p><p>தஞ்சாவூர், ஜூலை 13 - தஞ்சாவூர் மாவட்டத்தில் `தீக்கதிர்’ நாளிதழுக்கான சந்தா சேகரிப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர சந்தா சேகரிப்புப் பணிகளில் ஈடுபட்டார். இதில், பாபநாசம், திருவையாறு, பூதலூர் வடக்கு, தஞ்சை மாநகரம், தஞ்சை ஒன்றியம், அம்மாபேட்டை ஒன்றியம், பொதுத்துறை ஓய்வூதியர் அரங்க கிளை, காப்பீட்டு அரங்க கிளை உள்ளிட்ட இடங் களில் சேகரிக்கப்பட்ட 120 சந்தாக்களை டி. ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மூத்த தலைவர் என். சீனிவாசன், தீக்கதிர் நாளிதழ் மாவட்டப் பொறுப்பாளர் ஆர். மனோகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி. கண்ணன், என். சரவணன், கே. அபிமன்னன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. பக்கிரிசாமி, ஏ. நம்பிராஜன், பி.எம். இளங்கோவன், தஞ்சை மாநகரச் செயலாளர் வடிவேலன், ஒன்றியச் செயலாளர்கள் எஸ். கோவிந்தராஜ் (தஞ்சை), முருகேசன் (பூதலூர் வடக்கு), டி. முருகேசன் (பாபநாசம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram