தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தஞ்சாவூரில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

27 May 2026, 9:22 pm
தஞ்சாவூரில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தஞ்சாவூரில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தஞ்சாவூர், மே 27 - தஞ்சாவூர் மாவட்டத்தில் 140-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கடைகளில் 3000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு காலி பாட்டிலை திரும்ப வழங்கும்போது அந்த பத்து ரூபாய் திருப்பி வழங்கப்பட்டு வந்தது.

இதற்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதேபோல் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் கூடுதலாக மதுப் பிரியர்களிடம் டாஸ்மாக் ஊழியர்கள் வசூலித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது தவெக அரசு மதுக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக வசூல் செய்த பத்து ரூபாயை வசூலிக்கக் கூடாது என தெரிவித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையில் இருந்து தான் கடைக்கான கூடுதல் வாடகை, மின் கட்டணம், காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவதற்கான கூடுதல் பணியாளர்கள் என கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதை அந்த தொகையின் மூலம் சமாளித்து வந்ததாகவும், இவ்வாறு கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கும் செயலை பலரும் வீடியோக்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் டாஸ்மாக் நிறுவனம் அந்த ஊழியர்களை இடைநீக்கம் செய்து வருகிறது.

எனவே டாஸ்மாக் நிர்வாகம் கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

கடைக்கான வாடகை, மின் கட்டணம், பணியாளர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை அரசு உயர்த்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 140-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மதுப் பிரியர்கள் மது பாட்டில்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.