முந்தய பக்கம்

முனைவர் பட்ட மாணவர் சேர்க்கை ஆணை வழங்கல்

27 May 2026, 9:25 pm
முனைவர் பட்ட மாணவர் சேர்க்கை ஆணை வழங்கல்
<p><strong>முனைவர் பட்ட மாணவர் சேர்க்கை ஆணை வழங்கல்</strong></p><p>​தஞ்சாவூர், மே 27 - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2026 ஆம் கல்வியாண்டிற்கான முனைவர் பட்ட (Ph.D.) மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடை பெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் நடை பெற்ற இந்நிகழ்வில், சேர்க்கை பெற்ற மாணவிக்கு துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் மருத்துவர் பேராசிரியர் முனைவர் பெ.பாரதஜோதி தலைமை தாங்கி, முனைவர் பட்ட சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார். பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) கோ.பன்னீர்செல்வம் இந்நிகழ்விற்கு முன்னிலை வகித்தார். இவ்விழாவில் கல்வி நிலை ஆய்வு இயக்கக இயக்குநர் முனைவர் செ.கற்பகம், உதவியாளர்கள் ப.இராஜகுமாரி, க.வனஜா, சிவகாமி, காந்திமதி, சத்யா, கௌரி உள்ளிட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர் களும், பணியாளர்களும் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram