பட்டமளிப்பு விழா எப்போது?
6 Oct 2026, 8:53 pm
<p><strong>பட்டமளிப்பு விழா எப்போது?</strong></p><p>தஞ்சாவூர், அக். 6- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அலுவல்நிலை பணியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் க. சக்தி சரவணன்தலைமை வகித்தார். செயலாளர் கி. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுபேசினார். செயற்குழு உறுப்பினர் அ. இளங்கோவன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், “தமிழகத்தில் உள்ள பல அரசுபல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதால், பல்கலைக்கழகத்தின் அன்றாட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக, 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால் மாணவர்கள் பட்டச் சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே பட்டமளிப்பு விழாவை உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. </p>
