சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சோதனை கணக்கில் வராத பணம் பறிமுதல்
5 Jun 2026, 10:39 pm

சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சோதனை கணக்கில் வராத பணம் பறிமுதல்

தஞ்சாவூர், ஜுன் 5- தஞ்சாவூர், வல்லம் சார் பதிவாளர் அலுவலகங்களில் வியாழக்கிழமை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தினர்.

இதில் கணக்கில் வராத ரூ.30,120 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முகூர்த்த தினமான வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகளவு பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதனால் அந்த அலுவலகங்களில் லஞ்சப் பணம் அதிகளவில் புழங்க வாய்ப்புள்ளதாக லஞ்ச ஒழிப்பு பிரிவினர் கருதினர்.

இதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். அதன்படி தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே உள்ள கரந்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் தஞ்சாவூர் லஞ்ச ஒழி்ப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் அன்பரசன் தலைமையில், ஆய்வாளர் அருண்பிரசாத் மேற்பார்வையில் திடீரென சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சோதனைக்கு வந்ததும் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள், பொதுமக்கள், புரோக்கர்கள் கலக்கம டைந்தனர்.

பின்னர் எவ்வளவு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, பணம் ஏதும் பணியாளர்களின் மேஜையில், கைப்பைகளில் உள்ளதா என லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் ரொக்கப் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை.

அதே நேரம் வல்லம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வாளர்கள் சரவணன், பத்மாவதி தலைமையில் லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். சார்பதிவாளர் மேஜை, பணியாளர்களின் மேஜைகளில் திடீரென சோதனை செய்யப்பட்டது.

மேலும், பதிவு வைப்பறையில் உள்ள மேஜையில் ரூ.30,120 ரொக்கம் இருந்தது. இந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இந்த பணத்துக்கான கணக்கு இல்லா ததால், இந்தப் பணம் ஆய்வுக் குழு உறுப்பினரும், துணை வட்டாட்சியருமான பிரான்சிஸ் முன்னிலை யில் கைப்பற்றப்பட்டு, இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரண்டு மணி நேரம் நீடித்ததால், சார்பதிவாளர் அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.