தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் ஹாக்கி 2ஆவது முறை தங்கம் வென்று தஞ்சாவூர் மாணவர் சாதனை

14 May 2026, 9:09 pm
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் ஹாக்கி 2ஆவது முறை தங்கம் வென்று தஞ்சாவூர் மாணவர் சாதனை

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் ஹாக்கி 2ஆவது முறை தங்கம் வென்று தஞ்சாவூர் மாணவர் சாதனை

தஞ்சாவூர், மே 14- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் வி.எஸ். பரீட்சித், தேசிய அளவிலான ஸ்கேட் டிங் ஹாக்கி போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும், பட்டுக்கோட்டை மண்ணி ற்கும் பெருமை சேர்த்துள் ளார்.

பட்டுக்கோட்டை பான் செக்கர்ஸ் பப்ளிக் பள்ளியில் 3ஆம் வகுப்பு பயின்று வரும் 8 வயது சிறுவனான வி. எஸ்.பரீட்சித், சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற 8ஆவது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கிப் போட்டியில், 10 வயதிற்குட் பட்டோர் பிரிவில் தமிழக அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்றார்.

இதற்கு முன்னதாக, உத்தரகண்ட் மாநிலம் டேரா டூனில் நடைபெற்ற 7ஆவது தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் ஹாக்கிப் போட்டியிலும் முத லிடம் பிடித்து தங்கம் வென்று சாதனை படைத் திருந்தது குறிப்பிடத்தக்கது

. தேசிய அளவில் இரு முறை தங்கம் வென்று சாத னை படைத்த மாணவரை கௌரவிக்கும் விதமாக, பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மதியழகன் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரி வித்தார்.

மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸ்லின் மலர்கொடி, ஆசி ரியர்கள் மற்றும் ஆத்திக் கோட்டை கிராம மக்கள் அனைவரும் இனிப்புகள் வழங்கி மாணவரை உற்சாகமாகப் பாராட்டினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.