தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வீடு, கடைகளை அப்புறப்படுத்துவதற்கு கண்டனம்: வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம்

13 Jun 2026, 11:40 pm
வீடு, கடைகளை அப்புறப்படுத்துவதற்கு கண்டனம்: வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம்

வீடு, கடைகளை அப்புறப்படுத்துவதற்கு கண்டனம்: வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம்

தஞ்சாவூா், ஜுன் 13- தஞ்சாவூரை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் முன்புறம் 90-க்கும் மேற்பட்ட கடைகளை 70 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரிகள் நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த கடைகளின் பின்புறம், அவர்கள் குடியிருக்கும் வீடும் அமைந்துள்ளது.

இந்நிலையில், வீட்டுடன் கூடிய கடைகளை அரண்மனை தேவஸ்தானம் வெளியேற்ற முயல்வதாக வியாபாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இது தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள நிலையில் கடைகள், வீடுகளை அப்புறப்படுத்த முயற்சிப்பதைக் கண்டித்து தொடர்ந்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடைகள், வீடுகளை அப்புறப்படுத்துவதை கண்டித்து, சனிக்கிழமை மாரியம்மன் கோவில் பகுதியில் கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சனிக்கிழமை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் முன்புறமுள்ள 90-க்கும் மேற்பட்ட கடைகளை வணிகர்கள் அடைத்தனர். இதனால் அந்தப் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

பின்னர் மாரியம்மன் கோவில் நுழைவு வாயில் முன்பு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வணிகர் சங்கம் மாரியம்மன் கோவில் கிளை தலைவர் அன்பு தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் ஜெயக்குமார், செயலாளர் பிரபு, கௌரவத் தலைவர் பசுபதி, கிராம நல கமிட்டி ராதா, சூரிய நாராயணன், திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயபாண்டி வரவேற்றார். இந்த உண்ணாவிரத போராட்டத்தை வணிகர் சங்க பேரமைப்பு மாவட்டத் தலைவர் எம்.என்.துரை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, மாவட்டச் செயலாளர் தியாக சுந்தரமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் செந்தில்குமார், மாநகரச் செயலாளர் ஜெயக்குமார், இளைஞரணி அமைப்பாளர் ஜெயம் ரமேஷ், மகளிர் அணி அமைப்பாளர் டாரத்தி கிரேசி செல்வராஜ் , தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் பூதலூர் ஜெயக்குமார் ஆகியோர் உரையாற்றினர். ஜமால் என்ற ரவி நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.