முந்தய பக்கம்

பிளஸ்-2 நூறு சதவீதம் தேர்ச்சி: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

15 May 2026, 10:59 pm
பிளஸ்-2 நூறு சதவீதம் தேர்ச்சி:  பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

பிளஸ்-2 நூறு சதவீதம் தேர்ச்சி: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர், மே 15- தஞ்சாவூர் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திய 102 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். ​2025-2026 கல்வியாண்டில் தஞ்சாவூர் மாவட்டம் 97.19 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில், 13 ஆம் இடத்திலிருந்து, 7 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 81 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. இதில் 23 அரசு பள்ளிகள் அடங்கும். தேர்வு எழுதிய 25,944 மாணாக்கர்களில் 25,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் 95.77 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பாராட்டு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram