தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

​​​​​​​திருச்சி விரைவு செய்திகள்

16 Jul 2026, 10:00 pm
​​​​​​​திருச்சி விரைவு செய்திகள்

குப்பைகள் கொட்டப் படுவதை தடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை'

பாபநாசம், ஜூலை 16- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, உத்தாணியில் தொடங்கும் கும்பகோணம் - தஞ்சாவூர் இடையிலான பைபாஸ் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பைபாஸ் சாலையோரத்தில் ஆங்காங்கே குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப் படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பொத்திய படி செல்ல வேண்டியுள்ளது. இந்த சாலை அருகில் புதிதாக வீடுகள் உள்ளன. சாலையோரம் மரமே தெரியாத அளவு செடி, கொடி மண்டியிருப்பதால் குப்பை கொட்டுவது எளிதாகி விடுகிறது. குப்பை கிடங்காக மாறி வரும் சுந்தரப் பெருமாள் கோவில் பை பாஸ் சாலையில், குப்பைகள் கொட்டப் படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆய்வு

தஞ்சாவூர், ஜூலை 16- தஞ்சாவூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது தொடர்பாக கோட்டாட்சியர் உள்ளிட்டோர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சாவூர் பெரிய கோலிலுக்கு 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்கு பின்னர் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெரிய கோயில் சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், பெரியகோவில் சாலை ஒரு வழிப்பாதையாக ஜூலை 13 ஆம் தேதி மாற்றப்பட்டது. இதனால், காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுதால், மாநகர மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே, ஒரு வழிப்பாதை திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் பழைய நீதிமன்ற சாலையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக கோட்டாட்சியர் ப.நித்யா புதன்கிழமை பார்வையிட்டார். இதில், சாலையின் இருபுறமும் இருக்கும் நடைபாதை, மரங்களை அப்புறப்படுத்திவிட்டு சாலை விரிவாக்கம் செய்வது அல்லது வேறு வழியில் சாலை விரிவாக்கம் செய்வது குறித்து வரைபடங்கள் மூலம் ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் உடனிருந்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.