தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

23 Jul 2026, 10:35 pm
திருச்சி விரைவு செய்திகள்

தஞ்சையில் நாடக விழா தொடக்கம்

தஞ்சாவூர், ஜூலை 23- தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில், தஞ்சாவூர் காவேரி அன்னை கலை மன்றத்தின் 56 ஆம் ஆண்டு நாடக விழா, நாடகப் போட்டி புதன்கிழமை தொடங்கியது. தஞ்சாவூர் காவேரி அன்னை கலை மன்ற வளர்ச்சிக்கு ஓயாது உழைத்து மறைந்த மன்ற த்தின் துணைத் தலைவர் ஏ. ராஜகோபாலனின் படத்தை, மன்ற நிறுவனத் தலைவர் மா.வீ. முத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் எஸ். ஞானமாணிக்கம், மன்றத்தின் செயலாளர் அருணா மோகன், இணைச் செயலாளர் பரசை பாலா உள்ளிட்டோர் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது

தஞ்சாவூர், ஜூலை 23- தஞ்சாவூர் வடவாறு ஆற்றங்கரைப் பகுதியில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடிக்காலூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அவர் தஞ்சாவூர் கீழவாசல் அம்மா தோட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் என்ற விநாயகமூர்த்தி(23), பி.காம். பட்டதாரி என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்த பையைச் சோதனையிட்டதில், 1.450 கிலோகிராம் கஞ்சா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஆன்லைன் மூலம் வரவழைக்கப்பட்ட போதை மாத்திரைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதையடுத்து, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து, சஞ்சய் என்கிற விநாயகமூர்த்தியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாம்பு கடித்து மூதாட்டி பலி

தஞ்சாவூர், ஜூலை 23- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி முனியம்மாள்(60), கடந்த செவ்வாய்க்கிழமை தனது மாடுகளுக்குத் தீவனத்திற்காக வயலில் புல் அறுக்கச் சென்றுள்ளார். அப்போது அவரது வலது கையில் திடீரென பாம்பு ஒன்று தீண்டியுள்ளது. உடனடியாக அவர் சிகிச்சைக்காகப் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து பேராவூரணி காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.