தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொல்கத்தாவிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 27.30 லட்சம் சாக்குகள் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைப்பு

12 May 2026, 10:42 pm
கொல்கத்தாவிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த  27.30 லட்சம் சாக்குகள் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைப்பு

கொல்கத்தாவிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 27.30 லட்சம் சாக்குகள் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைப்பு

தஞ்சாவூர், மே 12- தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது.

இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படும். இது தவிர கோடைகால சாகுபடியும் மேற்கொள்ளப்படும்.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

மேலும், பல்வேறு இடங்களில் அறுவடை பணிகளும் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் அறுவடை செய்யப்படும் நெல்லுக்கு, சாக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சாக்குகள் வரவழைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை, கொல்கத்தாவில் இருந்து சரக்கு ரயிலின் 42 வேகன்களில் 5,460 பேரல் சாக்குகள் தஞ்சைக்கு வந்தன.

ஒரு பேரல் என்பது 500 சாக்குகள் ஆகும்.

அதன்படி 27,30,000 சாக்குகள் தஞ்சை வந்தன.

இதையடுத்து, ஏராளமான தொழிலாளர்கள் சரக்கு ரயிலில் இருந்து சாக்குகளை லாரிகளில் ஏற்றினர்.

இந்த சாக்குகள் தஞ்சை மாவட்டத்தில், அனைத்து தாலுகாவிலும் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.