முந்தய பக்கம்

சிறுமியை ஆணவக் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை

17 Jul 2026, 8:36 pm
சிறுமியை ஆணவக் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை
<p><strong>சிறுமியை ஆணவக் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை</strong></p><p>தஞ்சாவூர், ஜூலை 17- சிறுமியை ஆணவக் கொலை செய்த தந்தைக்கு தஞ்சாவூர் நீதி மன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட நெம்மேலி குடியானத் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், சோபி மண்டபம் கிராமத்தில் வசிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சதீஷ்குமாரும் காதலித்து வந்தனர். இந்தக் காதலை சிறுமியின் தந்தை தியாகராஜன் (58) பலமுறை கண்டித்து வந்தார். எனினும், இருவரது காதல் தொடர்ந்தது. இந்நிலையில், 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அம்மாபேட்டை சக்கரப்படுகை வெண்ணாற்றுப் படுகையில் தியாக ராஜன் தனது மகளைக் கை, கால் களைக் கட்டி, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து அம்மாபேட்டை சரக காவல்துறை வழக்குப் பதிந்து தியாக ராஜனை கைது செய்தது. இதுதொடர்பான வழக்கை தஞ்சாவூர் மகிளா நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த நீதிபதி ஏ.தீபா, தியாகராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்ப ளித்தார். இந்த வழக்கில் திறம்பட பணி யாற்றிய அரசு தரப்பு வழக்கறிஞர் சுகன்யா, காவல் ஆய்வாளர் இனி யவன், நீதிமன்ற சிறப்பு உதவி ஆய்வா ளர் புவனேஷ்வரி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் பாராட்டினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram