வீட்டுமனை பட்டா வழங்கல்
13 Jun 2026, 11:34 pm
<p><strong>வீட்டுமனை பட்டா வழங்கல்</strong></p><p>தஞ்சாவூர், ஜுன் 13- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட கூடநாணல் பகுதியைச் சேர்ந்த 44 பயனாளிகளுக்கு, விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தகுதி வாய்ந்த 44 நபர்களுக்கு தலா 90 சதுர மீட்டர் பரப்பளவிலான வீட்டு மனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர், “மக்களின் அடிப்படைத் தேவையான இருப்பிட வசதியை உறுதி செய்ய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. எனவே, பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட மனைகளில் இல்லங்களை அமைத்து சிறப்பான வாழ்வை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.</p>
