தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சோளக் காற்றால் முடங்கிய வாழ்வாதாரம்

5 Jun 2026, 8:17 pm
சோளக் காற்றால் முடங்கிய வாழ்வாதாரம்

சோளக் காற்றால் முடங்கிய வாழ்வாதாரம்

அரசு மானியத்தில் ஃபைபர் படகுகள் வழங்கத் தஞ்சை மீனவர்கள் கோரிக்கை!

தஞ்சாவூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் ‘சோளக் காற்று’ (சூறாவளி காற்று) பலமாக வீசி வருவதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

தங்களுக்கு அரசு மானிய விலையில் நவீன ஃபைபர் படகுகளையும், வலைகளையும் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கஜா புயல் தந்த பேரிடி தஞ்சாவூர் மாவட்டத்தில் தம்பிக்கோட்டை வடகாடு தொடங்கி கணேசபுரம் வரை சுமார் 32 மீனவக் கிராமங்கள் உள்ளன.

இப்பகுதியில் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் விசைப்படகுகளுக்கான முக்கிய மீன்பிடி இறங்குதளங்கள் அமைந்துள்ளன. கடந்த காலங்களில் இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இயங்கி வந்தன.

ஆனால், ‘கஜா’ புயலின் போது 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மூழ்கியும், முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்தன.

இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது இப்பகுதியில் வெறும் 147 விசைப்படகுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மீனவர்கள் தூரக்கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

மீன்பிடி தடைக்காலமும் நிவாரணமும் விசைப்படகுகள் தவிர, 4,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் ஃபைபர் படகுகள் மூலமும் மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர். இதற்கிடையே, கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, கிழக்கு கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (61 நாட்கள்) விசைப்படகுகளுக்கான மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.

இந்த 2 மாத கால வருவாய் இழப்பை ஈடுசெய்ய, தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் விசைப்படகு மீனவக் குடும்பங்களுக்குத் தலா ரூ.8,000 தடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சோளக் காற்றால் முடங்கிய நாட்டுப்படகுகள் மீன்பிடி தடைக்காலத்தில் நாட்டுப்படகுகள் கரையோரமாகச் சென்று மீன்பிடிக்க அனுமதி உண்டு.

இருப்பினும், தற்போது கடலில் வீசி வரும் ‘சோளக் காற்று’ எனப்படும் சூறாவளி காற்றின் காரணமாக நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர்.

இதுகுறித்து மனோரா கடற்கரை பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் செல்வராஜ் கூறுகையில், “மனோரா பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசிக்கின்றன. நண்டு, இறால், முரல் மீன் என ஒவ்வொரு வகைக்கும் தனித்தனி வலைகளைப் பயன்படுத்தி வருகிறோம்.

தற்போது கடலுக்குள் சூறாவளி காற்று பலமாக வீசுவதால், கடந்த ஒரு வாரமாக கடலுக்குச் செல்லவில்லை. இந்த காற்றின் தாக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் எனத் தெரிகிறது.

தற்போது கரையோரம் அமர்ந்து அடைப்பு வலை, நண்டு வலை, இறால் வலைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

உயர்ந்து வரும் உபகரணங்களின் விலை மீன்பிடி உபகரணங்களின் விலை உயர்வு தங்களை மேலும் கடனாளியாக்குவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு மீன்வலையின் விலை சுமார் ரூ.25,000 வரை உள்ளது. ஒவ்வொரு மீனவருக்கும் குறைந்தபட்சம் 4 செட் வலைகள் தேவைப்படுகின்றன.

மேலும், வலை தயாரிக்கப் பயன்படும் ஊதா நிற நைலான் கயிறு கடந்த ஆண்டு ஒரு ரோல் ரூ.250-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.350 முதல் ரூ.450 வரை விலை உயர்ந்துள்ளது.

மீனவர்களின் முக்கிய கோரிக்கைகள் சிறிய நாட்டுப்படகுகளில் சென்று மீன்பிடித்தால் நாளொன்றுக்கு ரூ.500 முதல் ரூ.1000 மட்டுமே வருமானமாகக் கிடைக்கிறது. இதில் டீசலுக்கே ரூ.200-க்கும் மேல் செலவாகிவிடுகிறது.

எனவே, ஏழ்மை நிலையில் உள்ள நாட்டுப்படகு மீனவர்களைக் கணக்கெடுத்து, அவர்களுக்குப் சற்று பெரிய அளவிலான ஃபைபர் படகுகள், காலா வலை, பீஸ் வலை ஆகியவற்றை அரசு மானிய விலையிலோ அல்லது எளிய வங்கிக் கடன் மூலமாகவோ வழங்க வேண்டும்.

பெரிய அளவிலான ஃபைபர் படகுகள் இருந்தால், டீசல் மற்றும் ஊழியர் சம்பளம் போக மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை நிலையான வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே, தமிழக அரசும் மீன்வளத்துறையும் உடனடியாக தலையிட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் ஃபைபர் படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கடலோர பகுதி மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

- எஸ்.ஜகுபர்அலி, தஞ்சாவூர்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.