தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

துரித உணவகத்தில் ஏசி சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் ஊழியர் பலி – 5 பேர் படுகாயம்

19 May 2026, 10:36 pm
துரித உணவகத்தில் ஏசி சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் ஊழியர் பலி – 5 பேர் படுகாயம்

துரித உணவகத்தில் ஏசி சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் ஊழியர் பலி – 5 பேர் படுகாயம்

தஞ்சாவூர், மே 19- தஞ்சாவூரில் உள்ள தனியார் துரித உணவு நிறுவனத்தில், ஏசி கேஸ் நிரப்பும் போது சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தில் உணவக ஊழியர் உயிரிழந்தார்.

மேலும், ஏசி மெக்கானிக் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் கே.எப்.சி துரித உணவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள சமையல் கூட ஏசியில் பழுது ஏற்பட்டதால், நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் கணேசன்(43) என்பவர், திங்கட்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் கேஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கடுமையான அழுத்தம் காரணமாக அது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த விபத்தின் அதிர்வில் கட்டடத்தின் ஜன்னல் மற்றும் கதவு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி பெரும் சேதமடைந்தன.

இவ்விபத்தில் ஏசி மெக்கானிக் கணேசன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். மேலும், பணியை கண்காணித்துக் கொண்டிருந்த உணவக ஊழியர்களான ரவிராஜ் (27), அருண்குமார் (26) மற்றும் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்களான கதிரேசன் (24), பிரேம் (26), அஜித்குமார் (22) ஆகியோரும் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினரும், தெற்கு காவல் நிலைய காவலர்களும் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த உணவக ஊழியர் ரவிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றி ஏ.சி கேஸ் நிரப்பப்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் தனியார் உணவகத்தில், ஏர்கண்டிஷன் பழுதுபார்க்கும் பணியின்போது எதிர்பாராதவிதமாக கம்ப்ரசர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இக்கோர விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த ரவி ராஜ் (27) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு முதல்வர் ச.ஜோசப் விஜய் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த கதிரேசன், பிரேம்குமார், கணேசன், அருண்குமார் ஆகிய நான்கு நபர்களுக்கும், லேசான காயமடைந்த அஜித்குமார் என்பவருக்கும் மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் குடும்பத்தி னருக்கும், உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள முதல்வர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நான்கு நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்த நபருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.