தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாக்குறுதியின்படி பயிர்க்கடன் தள்ளுபடி கோரி குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

29 May 2026, 12:07 am
வாக்குறுதியின்படி பயிர்க்கடன் தள்ளுபடி கோரி குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
<p><strong>வாக்குறுதியின்படி பயிர்க்கடன் தள்ளுபடி கோரி குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு</strong></p><p>தஞ்சாவூர், மே 28- தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ப.நித்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன் பேசுகையில், “தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணைக் கட்டும் முயற்சியைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். உர விலையை உயர்வைத் திரும்பப் பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்கிறோம்’’ என்றார். இதையடுத்து, பெரும்பாலான விவசாயிகள் வெளிநடப்பு செய்து, அலுவலகம் முன் முழக்கங்கள் எழுப்பினர். சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.