தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொங்கல் பரிசு பெற்றுக் கொண்ட தஞ்சை மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு நன்றி

24 Jan 2026, 3:38 pm
பொங்கல் பரிசு பெற்றுக் கொண்ட  தஞ்சை மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு நன்றி
<p><strong>பொங்கல் பரிசு பெற்றுக் கொண்ட &nbsp;தஞ்சை மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு நன்றி</strong></p> <p>தஞ்சாவூர், ஜன.24- &nbsp;தஞ்சாவூர் மாவட்டத்தில், பொங்கல் பரிசை பெற்ற பயனாளிகள், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கிடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, முதல்வர் சென்னை, பட்ரோடு நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் வழங்கி தொடங்கி வைத்தார். அதனடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1260 நியாய விலைக் கடைகளுக்கு உட்பட்ட 7,10,131 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், ரூ.220.89 கோடி மதிப்பிலான 2026 ஆம் ஆண்டிற்கான பரிசுத் தொகுப்பு பொருட்கள் &nbsp;வழங்கப்பட்டன. &nbsp;இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த ஆர்.ஆர் நகரில் வசித்து வரும் பயனாளி உமா தெரிவிக்கையில், &ldquo;எனக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு &nbsp;மற்றும் ரூ.3,000 ரொக்கம், வேட்டி, சேலை ஆகியவை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. &nbsp;இத்தொ கையானது &nbsp;எனது &nbsp;மருத்துவ செலவிற்கும், குடும்ப செலவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே, பொங்கல் பரிசை வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் ்கொள்கிறேன்&rsquo;&rsquo; என்றார். &nbsp;இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த தஞ்சாவூர் மாவட்டம் சேகரன் நகரைச் சேர்ந்த நாகேஸ்வரி என்பவர், &ldquo;எனக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு &nbsp;மற்றும் ரூ.3,000 ரொக்கம், வேட்டி, சேலை ஆகியவை கிடைத்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது எனது வயதான காலத்தில் ஒருமாத மருத்துவ செலவிற்கும், பொங்கலை கொண்டாடு வதற்கும் உதவியாக இருந்த. எனவே முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்&rsquo;&rsquo; என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.