ரேசன் கடை உணவுப் பொருட்களை தஞ்சை ஆட்சியர் திடீர் ஆய்வு
5 Jun 2026, 10:36 pm
<p><strong>ரேசன் கடை உணவுப் பொருட்களை தஞ்சை ஆட்சியர் திடீர் ஆய்வு</strong></p><p>தஞ்சாவூர், ஜுன் 5- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க, புதூர் நியாய விலைக் கடையில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து, மாவட்ட ஆட்சியர் இரா.ரேவதி வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்றும் அதன் தரம் குறித்து கேட்டறிந்த அவர், விற்பனை முனைய கருவி மற்றும் ப்ளூடூத் எடை கருவி மூலம் சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்தார். மேலும், `உங்கள் வாடிக்கையாளர் விபரம் அறிதல்’ (கேஒய்சி) திட்டத்தின் கீழ், பயனாளர்களின் கைரேகை விவரங்கள் விற்பனை முனைய கருவியுடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.</p>
