தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி: தஞ்சை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

26 Sept 2026, 10:05 pm
ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி:  தஞ்சை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி: தஞ்சை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர், செப். 26- தேசிய நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை (செப்.24) முன்னிட்டு, ஒரு கோடி பனை விதைகள் நடும் தொடர் பணியின் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை, தஞ்சாவூர் கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரியில் ஒரு லட்சம் பனை விதைகள் நடப்பட்டன. ஏரியின் 11 கிலோ மீட்டர் சுற்றளவில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இந்த விதைகளை நட்டனர். இந்நிகழ்ச்சியை தஞ்சை மாவட்ட ஆட்சியர் இரா.ரேவதி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சாஸ்திரா பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 10 கல்லூரிகளின் 3,000 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோவன், மணிகண்டன், வீரமணி, சரவணன் மற்றும் சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பனை விதைகளை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.