தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தஞ்சாவூர் பெரியகோவில் கோட்டை சுவர் சீரமைக்க இந்திய தொல்லியல்துறை அளவீடு

31 May 2026, 8:32 pm
தஞ்சாவூர் பெரியகோவில் கோட்டை சுவர் சீரமைக்க இந்திய தொல்லியல்துறை அளவீடு

தஞ்சாவூர் பெரியகோவில் கோட்டை சுவர் சீரமைக்க இந்திய தொல்லியல்துறை அளவீடு

தஞ்சாவூர், மே 31- தஞ்சாவூர் பெரியகோவிலில் சிதில மடைந்த கோட்டைச் சுவரை சீரமைப்பு செய்யும் பணிகளுக்காக, இந்திய தொல்லியல்துறையின் அளவீடு செய்யும் பணியை சனிக்கிழமை துவங்கின.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஏராள மான கல்வெட்டுகளும், சிற்பங்களும் உள்ளதால், உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.

இந்த கோவில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப் பட்டுள்ளதால், இந்திய தொல்லி யல்துறையினர் பழமை மாறாமல் கோவிலை பராமரித்து வருகின்றனர்.

சோழர்களின் கட்டிடக் கலைக்கு நிகராக, நாயக்கர் காலத்திலும், மராட்டியர் காலத்திலும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் பல்வேறு கட்டு மானப் பணிகளை மேற்கொண்டுள்ள னர். இதில் அகழி கோட்டை மதில் சுவர், கோட்டை கொத்தளம் எனும் கட்டுமானங்களுடன் நாயக்கர் காலத்தில், கோவிலுக்கு அரணான செம்பூரான் கற்களாலும், சுண்ணாம்பு கலவையாலும் இணைத்துக் கட்டுள்ளன.

இந்த கோட்டை மதில் சுவர்கள் கோவிலுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளன.

பெரிய கோவிலைச் சுற்றி உள்ள பெரிய கோட்டைச்சுவர், 35 அடி உயரமும், 15 அடி அகலமும் உடையது. இந்த சுவர் பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், கோவிலின் முகப்பு மற்றும் பின்புறம் அகழியில் மரங்களும், செடி, கொடிகளும் வளர்ந்து காடு போல் இருந்தன. இவை மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் தூய்மை செய்யப்பட்டன.

இதையடுத்து, சிதைந்து காணப்படும் கோட்டைச் சுவரை மீண்டும் பழமை மாறாமல், சீரமைப்பு செய்யும் விதமாக, தஞ்சாவூர் பெரியகோவில் தொல்லியல்துறை முதுநிலை பாரமரிப்பு அலுவலர் சோபியா முன்னிலையில், இந்திய தொல்லியல்துறை அலுவலர்கள் சனிக்கிழமையன்று சுவரின் சேதம் குறித்து ஆய்வு செய்தனர்.

பிறகு கட்டு மான பணிக்காக அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து தொல்லியல்துறை அலுவலர்கள் கூறியதாவது: கோட்டைச் சுவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப் பட்டன.

அதன்பிறகு பல்வேறு கார ணங்களால் கைவிடப்பட்டன.

தற்போது, கோட்டைச் சுவரை சீரமைக்கும் பணியை தொடங்க டெண்டர் விடப் பட்டுள்ளன. அதற்காக அளவீடு பணிகள் நடந்து வருகிறது.

பழமை மாறாமல் செய்யும் விதமாக செம்பூரான் கற்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கொண்டு வர திட்டமிட்டுள்ளன. விரைவில் பணிகள் துவங்கபட உள்ளது’’ என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.