கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில், அய்யம்பேட்டை அருகே சரபோஜி ராஜபுரம் மெயின்
27 Sept 2026, 10:25 pm
<p>கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில், அய்யம்பேட்டை அருகே சரபோஜி ராஜபுரம் மெயின் வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்காலால் சுமார் 2,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. குடமுருட்டி ஆற்றில் வழுத்தூரில் கட்டப்பட்ட பெட் டேம் பழுதடைந்த காரணத்தால், இந்த வாய்க்காலால் பயனில்லாமல் போனது. மாவட்ட நிர்வாகம் இந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி சரபோஜிராஜபுரம் வாய்க்காலை தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><br></p>
