முந்தய பக்கம்

தஞ்சையில் ஆவின் விற்பனையை அதிகரிக்க ஆலோசனைக் கூட்டம்

27 May 2026, 9:26 pm
தஞ்சையில் ஆவின் விற்பனையை  அதிகரிக்க ஆலோசனைக் கூட்டம்
<p><strong>தஞ்சையில் ஆவின் விற்பனையை அதிகரிக்க ஆலோசனைக் கூட்டம்</strong></p><p>​​​​​​​தஞ்சாவூர், மே 27 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ​இக்கூட்டத்தில், ஆவின் பொருட்களின் விற்பனையை அதிகரித்தல், பால் உற்பத்தியைப் பெருக்குதல் மற்றும் அலுவலக திட்டப்பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் குறித்தும், அவர்களின் பாலை தங்குதடையின்றி ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்வது மற்றும் அதற்கான பால்பணம் உடனுக்குடன் வழங்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ​தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்கள் ஈட்டிய நிகர லாபத்திலிருந்து வழங்கப்பட்டு வரும் போனஸ், ஊக்கத்தொகை மற்றும் தொடர்ந்து பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram