விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது த.வெ.க அரசு
1 Jun 2026, 9:30 pm

விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது த.வெ.க அரசு

தங்கம் தென்னரசு விமர்சனம்

சென்னை, ஜூன் 1 - த.வெ.க அரசின் விவசாயக் கடன் தள்ளு படி அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து உள்ள நிலையில், நிதி அமைச்சர் மரியம் வில்சன் “ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படிதான் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித் துள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வாக்கு வாங்கிய பிறகு ரிசர்வ் வங்கியை காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றுவதாகும் என்று குற்றம் சாட்டியுள்ளார். தனது சமூக வலைதளப் பதிவில் விரி வாக விளக்கிய தங்கம் தென்னரசு, ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் கடந்த 28.11.2025 அன்றே வழங்கப்பட்டிருந்தது என்றும், அதை முழுமையாக அறிந்த பிறகே 16.4.2026 அன்று தவெக தனது தேர்தல் அறிக்கையில் “ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயி களின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள வர்களுக்கு 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப் படும்” என்று வாக்குறுதி அளித்தது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். ஆகவே, தெளிவாக தெரிந்து கொண்டே வாக்குறுதி வழங்கி, வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகமாகும் என்று அவர் வலி யுறுத்தினார். அரசின் முதல் நிதிநிலை அறிக் கையிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அவர் கோரி னார்.