தீக்கதிர் முக்கிய செய்திகள்
17 Jun 2026, 9:51 pm

திமுக ஆட்சியை விட குறைவாக கடன் வாங்கினால் பதவி விலகுகிறேன் தங்கம் தென்னரசு சவால்

சென்னை, ஜூன் 17 - தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து, நிதியமைச்சர் மரிய வில்சன் செவ்வாயன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அப்போது, தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ. 13 லட்சத்து 18 ஆயிரம் கோடி என்றும், கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சி யில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த நிதிநிலை அறிக்கை குறித்து, முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, புதனன்று (ஜூன் 17) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியா ளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை!

நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை தமிழ்நாட்டுக்கு புதிதல்ல. 2001 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளிலும் இது வெளி யிடப்பட்டுள்ளது. 2001-இல் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை அதற்கு முந்தைய 10 ஆண்டுகளின் நிதி நிலை விப ரங்களைக் கொண்டிருந்தது; 2021-ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கை முந்தைய 15 ஆண்டுகளின் விபரங்களை கொண்டிருந்தது.

ஆனால் தற்போதைய வெள்ளை அறிக்கையில் வெறும் 5 ஆண்டுகளின் நிதி நிலை மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதற்கான காரணம் என்ன? யாரைக் காப்பாற்றும் முயற்சி யாக அதற்கு முந்தைய அதிமுக அரசின் விபரங்கள் சொல்லப் படவில்லை. இயலாமையை மூடி மறைக்கவும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்கவும் த.வெ.க. அரசு மக்களை ஏமாற்றவே இந்த வெள்ளை அறிக் கையை வெளியிட்டுள்ளது. இது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.

பொதுமக்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொது மக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி, அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப் பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டிலேயே அரசின் நிதி நிலைமையை தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். அதற்குப் பிறகுதான் த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டது. தேர்தல் வாக்குறுதி களை எப்படி நிறைவேற்றும் என்பதை பயிர்க்கடன் தள்ளு படி விவகாரத்திலேயே எல்லோரும் பார்த்துவிட்டோம். இப்போது வாக்குறுதிகளை நிறைவேற்ற வழியில்லாமல் கார ணங்கள் கூறி தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

ரூ. 20 லட்சம் கோடியாக கடன் அளவு உயரும்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ. 6 லட்சம் கோடி தேவைப்படும் என்றும், ஆட்சி முடிவில் தமிழ்நாடு அரசின் கடன் ரூ. 20 லட்சம் கோடியாக உயரும். கடந்த 5 ஆண்டு களில் தி.மு.க. அரசு ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய சராசரி கடனை விட, த.வெ.க. அரசு குறைத்து வாங்கினால் தான் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.

அரசு கடன் வாங்குவது தவறல்ல, அந்தக் கடனை எப்படி மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்பட தமிழ் நாட்டில் நடந்துகொண்டிருந்த மூலதன திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டு, மூலதன திட்டங்களுக்காக செலவிட வில்லை என்று தி.மு.க. அரசின் மீது குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

நாளை எங்களிடம் புதிய திட்டம் எதையும் எதிர்பார்க்கா தீர்கள் என்பதை சொல்லாமல் சொல்லவே ஆளுநர் உரைக்கு முன்பாகவே இந்த வெள்ளை அறிக்கை வெளி யிடப்பட்டுள்ளது. இவ்வாறு தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அங்கீகாரம்

சென்னை: அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமி செயல்படுவதை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் ஜூன் 18 தொடங்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொ டரில் அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக செயல்படுவார். அதிமுகவின் சட்டமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பான விவகாரத்திற்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.