தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தங்கச்சிமடம் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைந்து முடித்திடுக!

11 Jun 2026, 9:50 pm
தங்கச்சிமடம் தூண்டில் வளைவு   அமைக்கும் பணியை விரைந்து முடித்திடுக!
<p><strong>தங்கச்சிமடம் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைந்து முடித்திடுக! </strong></p><p>இராமநாதபுரம்,ஜூன் 11- இராமநாதபுரம் மாவட் டம், இராமேஸ்வரத்தில் ஜூன் 11 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் , மீன் வளத்துறை மற்றும் நக ராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் மீன் இறங்குதளம் பகுதியில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன், பணி களை உரிய காலத்திற்குள் முடித்து மீனவர்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் இராமேஸ்வரத் தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சென்று உணவு சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு உணவுப் பொருள்களின் இருப்பு குறித்த பதிவேடு ஆய்வு செய்ததுடன், பொருள்களின் தரத்தன்மை குறித்தும் பார்வையிட்டு, உணவுப் பொருள்களை தேவையான அளவு கையி ருப்பில் வைத்துக் கொள்ள வேண்டுமென அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து இராமேஸ் வரம் நகராட்சி அலுவல கத்திற்கு சென்று அலுவல கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்ததுடன், நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தவுடன் பணி களை உரிய காலத்திற்குள் முடித்திடவும் பணிகள் நடை பெறும் போது அலுவலர்கள் ஆய்வு செய்து பணிகளின் தரத்தன்மையை உறுதி செய்து உரிய காலத்தில் முடித்திட வேண்டுமென அறிவுறுத்தியதுடன், நக ராட்சியில் உள்ள சாலை களை நல்முறையில் பரா மரிப்பதுடன் நகராட்சி பகுதி களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டு மென மாவட்ட ஆட்சித்தலை வர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மீன்வளம்- மீனவர் நலத்துறை துணை இயக்கு நர் சின்னகுப்பன் இரா மேஸ்வரம் நகராட்சி ஆணையர் ஆண்டவர் ,அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.